இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டெனிஸன்
வாழ்ந்துவிட்டேன் !
I
அளவிலா இனிமை எது? அதை
என்வாழ்வு அடையு முன்பே,
பூமி பிளவாமல் என்னைத் தாங்கி நிற்க !
பின்னர் வருவது வரட்டும் !
நான் பைத்தியமே கொண்டால் என்ன ? -
வாழ வேண்டிய நாள் வாழ்ந்தவ ளாவேன்!
II
என்னைக் காதலிக்க ஒருவர் உளர்
என்று உறுதியாக நான் அறியுமுன்,
இனிய வானம் இருளா திருக்குமாக !
பின்னர் வருவது வரட்டும் !
அப்பொழுது துக்கம் தோய்ந்த வாழ்வில்
வாழவேண்டிய நாள் வாழ்ந்தவ ளாவேன் !
26