பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் ിഞങ്ങു 81 பிறந்த பெண்கள் இருவரை இப்படித் தட்டிக்கொடுத்துக் குடும்பத்தை நாசமாக்கும் சதிக்கூட்டம் என்றாவது உருப்படுமா என என் இளமை நெஞ்சம் எண்ணியது உண்டு. ஆம், அந்தப் பகை முட்டிய குடும்பங்கள் இன்று முன்னை விடத் தாழ்ந்தே நிலை கெட்டு நிற்கின்றன. நான்காம் நாள் அந்த நிலத்தரகர் மறுபடியும் வந்தார். நிலத்தின் விலை நாலாயிரத்து ஐநூறு ஆக ஏறிவிட்ட தென்றும் மறுநாளே என் பெரியம்மா பேருக்குப் பத்திரம் எழுத ஏற்பாடாகிவிட்டதென்றும் கூறினார். அம்மா நாலாயிரத்து அறுநூறு என்றார்கள். இப்படியே இவர்கள் இருவருக்கும் இடையில் சில நல்லவர்'கள் தூக்கிவிட நாலாயிரத்துக்கு முடிந்த நிலம், நாலாயிாத்து எழுநூற்று ஐம்பதுக்கு என் அன்னை பேருக்கே விலையும் முடிவு செய்து பதிவும் செய்யப்பெற்றது. ஒரே குடும்பத்தில் பிறந்த இரண்டு சகோதரிகளை வேறுபடுத்தி ஒரு நிலப் போட்டியில் அதிகமாக எழுநூற்று ஐம்பது ரூபாயை இழக்கவைத்த பெருமை ஊரில் ஒரு சிலரைச் சார்ந்ததாகும். இந்த நிலை இன்னும் எல்லாக் கிராமங்களிலும் இருப்பதனால்தான் கிராம மக்கள் வளர்ச்சி அடையாமல் கெடுகின்றனர். எத்தனையோ கிராமங்களில் பல குடும்பங்கள் - ஒன்றி வாழ்ந்த குடும்பங்கள் - இடையில் சிலரால் பிரிக்கப்பட்டு நிலைகெட்டு அழிகின்றன. நீதி மன்றங்கள் ஏறி, வழக்கறிஞர்களுக்கு ஆயிரக்கணக்கில் கொட்டிக்கொடுக்க நினைக்கும் உடன் பிறந்த உள்ளம் தன் தம்பிக்கோ அண்ணனுக்கோ ஐந்தடி நிலத்தை இனாமாக விட்டுக்கொடுக்க மறுக்கிறது. இந்த நிலை இன்றும் வளர்ந்துகொண்டே போகிறது என்பதை எண்ணிக்கையில் வளர்ச்சியுறும் நீதி மன்றங்கள் காட்டவில்லையா? என் வீட்டு நிலப்போட்டி இந்த அளவோடு முடிந்துவிட வில்லை. ஊரில் யாரோ என் பெரியம்மாவை நின்றாகத் ஆ- 6