பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 D ஆரணிய ಹಿಣಿ- ಬನ್ನಿ

சொல்லப்பட வேண்டிய பேரிறைவர்கள் எல்லாரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த முறை வைப்பில் சிவனுக்குத் தலைமை தந்திருப்பது போல் தோன்றுகிறதோ!

புகழான சொல்லுக்கு ஏற்ற கற்புடைய குலமகளிர்க்கு யாரும் இத்தீமை செய்ய எண்ணார். இவள், நற்குடி மகளிர்க்கு ஏற்ற செயல் செய்திருக்க மாட்டாள். கற்பும் கெட்டிருப்பாள் - அதனால் கரனே இவளை வெறுத்து இவ்வாறு செய்திருக்கலாம் என்றனர் சிலர்.

"சொல் பிறந்தார்க்கு இது துணிய ஒண்ணுமோ

இற்பிறந்தார் தமக்கு இயைவ செய்திலள் கற்பு இறந்தாளெனக் கரன் கொலாம் இவள் பொற்பு இறந்துற ஆக்கினன் புகன்று என்றார்சிலர்'

(32) "தகை சான்ற சொல்காத்துச் சோர்விலாள் பெண்'

- (56) என்னும் குறள் பகுதி ஈண்டு எண்ணத்தக்கது.

இவ்வாறு அங்கிருந்த பெண்டிர் பல விதமாக எண்ணி வருந்தினர். சூர்ப்பணகை அழுததல்லாமல் அவளுக்கு இப்படி ஆய்விட்டதே எனப் பெண்கள் பலரும் அழுதனர்.

அழுகுரல்

இலங்கையில் இதுவரையும், முழவு, வீணை, யாழ், குழல், சங்கு, தாரை ஆகியவை எழுப்பும் மகிழ்ச்சியான ஒலியைத் தவிர அழுகுரல் கேட்டதே இல்லை. இப்போது தான் சூர்ப்பணகையால் இலங்யிைகல் அழுகுரல் தோன்றலாயிற்று: