பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஆரணிய காண்ட ஆய்வு

“டாக்டர் மகனை டாக்டர் என்பதில்லை. சோதிடர் மகனைச் சோதிடர் என்பதில்லை. ஆசிரியர் மகனை ஆசிரியர் என்பதில்லை. அவர்களின் பிள்ளைகளும் டாக்டராகவோ - சோதிடராகவோ - ஆசிரியராகவோ இருந்தால்தான் அப்பெயர்கட்குத் தகுதி உடையவராவர். அதேபோல், பிராமணர்களின் பிள்ளைகள் பிராமண ராகார்; அவர்களும் பிராமணர்க்கு உரிய தொழில்களைச் செய்தால்தான் பிராமணர் எனச் சிறப்பிப்பதற்கு உரிய தகுதியினராவர்.

இந்தக் கருத்து சித்பவானந்தாவின் சொந்தக் கருத்து அன்று. இவர் நாற்பது ஆண்டுகட்கு முன் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். இதே கருத்தைப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே இராமன் காலத்திலேயே பிராமணர்கள் தெரிவித்ததாக இந்தப் பாடலின் வாயிலாகக் கம்பர் தெரிவித் துள்ளார்.

மேலும் முனிவர்கள் கூறினர், யாங்கள் அரக்கராகிய இருள் நடுவே உள்ளோம்; ஞாயிறு போல் நீ தோன்றி யுள்ளாய்; நீ அருளுடைய வீரன் ஆதலின், யாங்கள் உன் அடைக்கலம் - நீ தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் - என்றனர்.

"இருளிடை வைகலெம் இரவி தோன்றினாய்

அருளுடை வீர கின் அபயம் யாம் என்றார்’ (16) வைகல் = நாள். வரலாற்றில் இருள் காலம்’ (The Dark Ages) என்று சொல்வது போல, முனிவர்கட்கு இந்த நாள்கள் இருள் நாள்களாகத் தோன்றுகின்றனவாம்.

இராமன் முனிவர்கட்குக் கூறுகிறான். அரக்கர்கள் என்னிடம் அடைக்கலம் என வந்து வணங்காராயின், அவர்கள் எந்த அண்ட கோளத்தில் செல்லினும் என்