பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தமிழர் பண்பாடு

ஒரு சில வரலாற்றுத் தேதிகளைப் பெற, சில கல்வெட்டுகள் நமக்குத் துணைபுரிந்தனவோ, அந்தக் காலமாம் கி.பி. 600ஐ அடையும் வரை, அதிகபட்சம், நாம் பெறக்கூடியது தெளிவில்லாத சில நிகழ்ச்சிகளின் வரிசைப்பட்டியல்தான்.

படி எடுத்தல்

சமஸ்கிருதச் சொற்களை, உரோமன் எழுத்து வடிவில் எழுதியது பெரும்பாலான சமஸ்கிருத அறிஞர்கள் கடைப்படித்த அதே முறைதான். தமிழ்ச் சொற்களுக்காக மேலும் சில எழுத்துக்களை மேற்கொண்டுள்ளேன். அவை யாவன; 'ஃ'ற்கு 'H'; 'ஏ’ வுக்கு 'E'; ‘ஓ’ வுக்கு ‘O’ ‘ற’ கர மெய்க்கு ‘u’. ‘ழ’ கர இன்றைய ஒலிப்பு நகரத்திற்கு முறையில் ‘ன’ கரத்தை வேறு பிரித்துக் காண முடிய வில்லையாகவே னகரத்திற்க்குத் தனிக்குறியீடு எதையும் பயன்படுத்தவில்லை. தமிழை உரோமன் எழுத்தில் எழுதுவது, தனிச்சிக்கலைத் தோற்றுவிக்கிறது. தமிழ் நெடுங்கணக்கில் பல மெய்யெழுத்துக்களைக் குறிக்கவரும் குறியீடுகள் இரண்டு ஒலிகளைக் குறிக்கும் பணியினைப் புரிகின்றன. உரோமன் எழுத்தில் எழுதுவது ஒலிப்பு முறையோடு வேறுபட்டதாகி விடின் அச்சொல் தன் பொருளையே இழந்துவிடுகிறது. உரோமன் எழுத்தில் அளித்துள்ளேன்.

நான் மேற்கொண்ட ஒலிப்புமுறை பெரிதும் சரியான ஒன்று, ஒவ்வொரு தமிழனும் அதைப் பின்பற்றலாம் அல்லது உணர்ந்து கொள்ளலாம் என்றே எண்ணுகின்றேன். நான் சந்திக்க நேர்ந்த மற்றொரு சிக்கல், ஒரே சொல் சமஸ்கிருத வடிவிலும், தமிழ்வடிவிலும் காணப்படும் போது அதை எழுத்துவடிவில் தரும் நிலையில் ஒரு முரண்பாடு ஏற்பட்டு விடுகிறது என்ற உண்மை நிலையாகும். சூழ்நிலை, ஒருவரை சமஸ்கிருதத்தில் சிந்திக்கவைக்கும் போது, இவைபோலும் சொற்களைச் சமஸ்கிருத எழுத்துகளிலும், தமிழில் சிந்திக்க வைக்கும்போது, தமிழ் எழுத்துகளிலும் தந்துள்ளேன், இம்முறை, அவ்விரு மொழிகளில், ஒரு மொழியைத் தெரியாத வாசகர் களைத் தடுமாறச் செய்யக்கூடும் என்றாலும் இம்முரண்பாட்டு நிலையைத் தவிர்த்துவிடல் கூடும் என நான் நினைக்கவில்லை.