பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8

ஆருயிர் மருந்து


கண்ணீர் மாற்றினாள். அவளுக்கு ஆறுதல் கூறினாள் மேலும் தூய புத்த தேவனின் பாதங்களில் அணிய இருந்த மாலை கண்ணீரினால் மாசுண்டதே என்று வருந்தி, அந்த மாலையை விடுத்து வேறு மாலை தொடுக்க வேண்டும் என்றாள் மாதவி. அதற்கேற்ற மலர்களைக் கொய்து வருக என்று மணிமேகலைக்கு ஆணையிட்டாள்.

எங்கே செல்வது?

மணிமேகலையின் அருகே அவளை விட்டு நீங்காது சுதமதி என்னும் தோழி இருந்தாள். அன்னையார் மலர் கொண்டு வருக என்று ஆணையிட்டதும் எங்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாள் அவள். அழகும் அறிவும் ஒருங்கே பெற்ற செல்வி மணிமேகலை எங்கே சென்று மலர் கொண்டு வருவாள் என எண்ணினாள். உடனே அவள் மாதவியுடன் பேசலானாள்.

‘அன்னாய்! மணிமேகலையைப் புறத்தே அனுப்ப வேண்டாம். இவளது கண்ணீரைக் காணின் காமனும் கலங்குவான். ஆகவே ஆடவர் இவளைப் புறத்தே காணுமாறு அனுப்ப வேண்டாம்' என்றாள் சுதமதி. மேலும் தான் அந்த நகருக்கு வந்த வரலாற்றைக் கூறினாள். தான் சண்பை நகரத்துக் கவுசிகன் என்னும் அந்தணனுடைய மகளென்றும், தான் தனித்து அஞ்சாமல் சோலையிற் சென்ற காரணத்தாலேயே தனக்குத் தீமை வந்துற்றதென்றும், சோலையில் தனிமையில் கண்ட மாருதவேகனென்னும் வித்தியாதரன் தன்னைக் கவர்ந்து, சில காலம் தன்வயமாகவே வைத்திருந்து, பின்னர் அந்நகரத்தில் இந்திரவிழா காண வந்தவன், அங்கேயே தன்னை விட்