பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2

ஆருயிர் மருந்து

னும், தன் மகள் மணிமேகலையின் பொருட்டேனும் அவள் தன் துன்பம் ஆற்றியிருக்க வேண்டும் என அறிவுறுத்தினர் அயலவர். மாதவியும் ஆற்றியிருந்தாள்.

தன் சேயின் முகம் கண்டு ஒருவாறு வாட்டம் மறந்து, வாழ்ந்து வந்தாள் மாதவி. அவளது தாய் சித்திராபதி அவள் வருத்தம் மாற்றி, கோவலனை மறந்து, வேறு வகையில் வாழ வேண்டும் என்று வற்புறுத்தினாள். மாதவியின் மகள் மணிமேகலை தன் வயப்படுவாள் என எண்ணி மகிழ்ந்தாள் சித்திராபதி. என்றாலும் மாதவியின் மனமோ எல்லாவற்றையும் கடந்து நின்றது. பிரிந்த கணவனை எண்ணி எண்ணி ஏங்கினாள்; வாழ்வில் வெறுப்புற்றவளாகித் துறவை விரும்பினாள். அதற்கேற்றாற் போன்று அன்று தமிழ் நாட்டில் பௌத்தம் தலைசிறந்து வாழ்ந்து வந்தது. அச்சமயத் துறவியாகிய அறவணவடிகள் அண்மையில் ஓரிடத்தில் தங்கியிருந்தார். அவரிடம் அடைக்கலம் புகுந்தாள் மாதவி. தான் கோவலனுடன் வாழ்ந்த வாழ்வினையும், அவன் பிரிந்த வரலாற்றினையும் கூறி, தான் பௌத்த தேவன் அடிபற்றி வாழ விரும்பிய வகையையும் சொன்னாள். அவள் வரலாற்றை கேட்ட அடிகள் உலக நிலையை நினைந்தார். மக்கள் பெறும் இன்ப துன்பங்களை எண்ணிப் பார்த்தார். அவற்றின் காரணங்களை ஆராய்ந்தார். ஆம், அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் பற்று என்பதை அறிந்தார். 'ஆரா இயற்கை அவா நீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்' என்ற வள்ளுவரின் வாய்மொழியை எண்ணினார். மாதவியின் வருத்தத்துக்குக் காரணம், அவள் முன்னே கோவலன் மேல் அளவு கடந்த பற்றுக்