பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராபேல் ஆராம்யன் 93 அவன் ஹல்லோ கூறி, எனக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்தான். உட்கார்ந்ததும் கேட்டான் : 'நீங்கள் எப்பவாவது டாஹிட்டி போயிருக்கிறீர்களா?” நான் அதுபற்றிச் சிந்தித்தேன். 'நீ எதுக்காகக் கேட்கிருய்?’ என்றேன். 'விசேஷமாக ஒன்றுமில்லை. அருமையான வாழைமரங்களை அங்கு அவர்கள் வளர்க்கிருர்கள்’’ என்று அவன் சொன்னன். நான் வாழைப்பழங்களை ருசித்ததே இல்லை. ஆயினும் உதட்டைச் சப்பிக்கொண்டே சொன்னேன் : 'நேர்த்தியான விஷயம் : வாழைப்பழங்கள் வெகு இனிப் பானவை.’’ 'பெர்சிய வளைகுடாவில் முத்துக் குளிப்பவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?’’ திரும்பவும் நான் யோசிக்கலானேன். அவனுக்கு நான் எப்படி பதில் அளிக்கவேண்டும்? இல்லை. நான் பார்த்ததில்லை. நான் பெர்சிய வளைகுடா வுக்குப் போகையில், காலதாமதம் ஏற்பட்டது. முத்துக் குளிப்பவர்கள் எல்லோரும் வீட்டுக்குப் போய்விட்டார்கள் .' "என்ன பரிதாபம்!’ என்று சிறுவன் சொன்னன். அவனது சாம்பல் நிறக் கண்களின் தோற்றத்திலிருந்து, அவன் அடுத்த கேள்வியை யோசித்துக்கொண்டிருந்தான் என்று நான் அறிந்தேன். அதற்குள் நான் முந்திக்கொண்டேன். என் கண்ணுல் நான் கண்டிராத நாடுகளைப்பற்றி நானே பார்த்தது போல் அவனுக்குச் சொன்னேன். ஆப்பிரிக்காவில் சிங்கங்களையும் காட்டெருமைகளையும் வேட்டையாடுவதுபற்றியும், குள்ள மனிதர்கள் சிறுத்தைப் புலிகளைக் கொல்ல உபயோகிக்கும் சிறிய ஈட்டிகள் பற்றியும் சொன்னேன். அவன் முறுவலித்தான். 'இந்தக் காலத்தில் யாரும் ஈட்டிகளைக்கொண்டு வேட்டை யாடுவதில்லை. அவர்கள் துப்பாக்கிகள் வைத்திருக்கிருர்கள்’’ என்ருன். அவன் தன் பையிலிருந்து, கசங்கிய உலகப் படத்தை எடுத்து மேஜைமேல் பரப்பி, மஞ்சள் வர்ணம் பூசப்பெற்ற ஆப்பிரிக்கா மீது குனிந்தான். .