பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராபேல் ஆராம்யன் 9荡 நடக்கையில் நான் எனக்குள் கூறினேன் : சீக்கிரம் நாங்கள் திரும்பிச் செல்வோம். அவன் அம்மா என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தால், வாதங்கொட்டை போன்ற தன் சாம்பல் வர்ணக் கண்களை மறுபடியும் தாழ்த்தினால், நாங்கள் இரண்டு பேரும்-இந்தச் சிறுவனும் நானும்-உண்மையான யாத்திரை போய், விந்தை நகரங்களையும், புதிய மனிதர்களையும் பார்ப் போம். பிறகு வீடு திரும்புவோம். அங்கே அவன் அம்மா எங்களுக்காகக் காத்திருப்பாள். பையன் தன் பைக்குள்ளிருந்து உலகப் படத்தை எடுத்து, நாங்கள் பார்த்த எல்லா நாடுகளையும் பற்றி அவளுக்குச் சொல்வான். டாஹிட்டி பற்றியும், பெர்சிய வளைகுடாவின் முத்துக் குளிப்பவர்கள்பற்றியும், ஆப்பிரிக்காவில் உள்ள சிங்கங்கள் மற்றும் கறுப்பு மான்கள் பற்றியும் சொல்லு வான். எங்கள் கதைகளை நாங்கள் சொல்லி முடித்ததும், புதிய யாத்திரைகள்பற்றிய கனவுகளில் நாங்கள் ஆழ்ந்துவிடுவோம். அவ் வேளையில் அவள் எங்களுக்காகத் தேநீர்-இனிமையும் மணமும் நிறைந்த புதிய தேநீர்-தயாரிப்பாள்.