பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம்.கிர்திச் சார்கிஸ்யன் | {}9 அப்போதுதான் விடிந்திருந்தது. கட்டடத்தில் குடியிருந்த வர்கள் அரைகுறை ஆடைகளோடு அவரவர் பால்கனிக்கு ஓடிவந்தார்கள். ஏரெவிக் தான் கூப்பிட்டாள். அவள் கீழே நின்று சிரித்துக்கொண்டிருந்தாள். எத்தகைய பிரகாசமான, வெயில் நிறைந்த இனிய நாள் அது! ஏரெவிக் கைகளில் ஒரு சிறு பெட்டியும் ஒரு மூட்டையும் வைத்திருந்தாள். அவள் கண்களில் வைராக்கியம் நிறைந்திருந்தது. எல்லாத் தாக்குதல்களேயும் எதிர்த்து நின்ற காதலிளுல் அவை மின்னின. கேரன், 'மெரினு’’ கீதத்தைச் சீட்டி அடித்தவாறே கீழே ஒடினன். உடனேயே இருவரும் சந்தோஷமாகப் படி ஏறி மேலே வந்தார்கள். கேரனின் அம்மா வாசலிலேயே அவர்களை வரவேற்ருள். ஏரெவிக், என் சூரிய ஒளியே!’’ என்ருள். ஏரெவிக் இப்போது எங்களைச் சேர்ந்தவள். அண்டை அயலார் பலரைக்கொண்ட எங்கள் பெரிய குடும்பத்தில் அவளும் ஒரு நபர் ஆகிவிட்டாள். எங்கள் சேர்மானத்தை, எங்கள் செல்வக் களஞ்சியத்தை, எண்ணி நாங்கள் மகிழ்கிருேம். ஏரெவிக்கின் அலைபாயும் சிரிப்பு, கானியோவின் உரத்த துயரப் புலம்பலே மூழ்கடித்துவிட்டது. நீலவானத்தின் இந்தத் துணுக்கு இப்போது உயரே ஐந்தாவது மாடியில், வானத்துக்கு நேராகக் குடியிருக்கிறது. 'அவள் தன் வீட்டைக் கண்டுகொண்டாள்’’ என்று எராநூய் அத்தை சொன்னாள். 'காதல் அமரத்துவமானது. மரணத்தைவிட வலியது காதல். மாக்சிம் கார்க்கி இப்படித்தான் சொல்கிருர்’ என்று கிழவர் வானே கூறினர். ஆமாம். காதல் வலிமையானதுதான். ஆனல் வலிமை மிகுந்திருக்கிறவர்களுக்கு மட்டுமே. நீங்கள் எவ்வளவு மாறிப்போனிர்கள், பெண்களே. உண்மை யாகவே மாறிவிட்டீர்கள். உலகமும் உங்களோடு மாறுதல் பெறுகிறது. இதை நீங்கள் அறிவீர்கள். அரைச் செவிடும் முற்றிலும் தளர்ந்துவிட்டவருமான எண்பது வயது வாளுேகூட மாறிப்போர்ை. நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்...