பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 0 ஆகஸ்ட் பார்த்தான். அவளுக்காக ஏங்கினன். ஆனலும் அதிகம் கூச்சம் உடையவனாக இருந்தான். அவள் மார்புகள் நன்று உருண்டு திரண்டு இறுகிக் காணப்பட்டன. பிறகு அவன் மார்டினை நோக்கினன். அவனுடைய சீருடை அளவெடுத்துத் தைத்தது மாதிரி அவ னு க் கு எவ்வளவு பொருத்தமாக இருந்தது என்பதைக் கவனித்தான். அவன் இடுப்பைச் சுற்றி யிருந்த எடுப்பான தோல் பட்டையையும் பார்த்தான். இவனது இடுப்புவார் பருத்தி நெசவாலானது: காலணிகள் கொஞ்சம் பெரிதாக இருந்தன: அவற்றுள் இவன் பாதங்கள் ஓசை எழுப்பின. ஆகவே, இவன் வேண்டாம், மார்டின். நான் சில வேலைகளைக் கவனிக்கவேண்டியிருக்கிறது ' என்று சொன்னன். அந்த சார்ஜன்டுடன் தொடர்பை ஒரே அடியாக அறுத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டு, இவன் ரஸ்தாவை விட்டுத் திரும்பி நடந்தான். இவனும் ச ரி யாகப் பொருந்தியிருக்கிற காலணிகளும், ஆபீசருக்குரிய நல்ல தோல் வாரும் வாங்கவேண்டும் என்று நினைத்தான். மார்டின் அன்று மாலை திரும்பியபோது, இவன் முழு நேரமும் உள்ளுக்குள்ளேயே இரு ந் தான். அவன் பல்லிளித்தான், - "அழகான அன்னம் போல, அழகான அன்னம் போல, நீ தோன்றுகிருய் எனக்கு; ஒரு அழகான அன்னம் போல’’ என்று அவன் பா டு கையி ல் , அவன் கண்கள் கனவில் மிதந்தன. 'நீ ஏன் உடன்வரவில்லை, மடையா?’ என்ருன் அவன். 'அதில் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது?’ என்று வருந்தும் குரலில் ஆண்ட்ரோ பதிலளித்தான். வயிற்றின்மீது படுத்தபடி கிடந்த மார்டின் பாடிக்கொண்டேயிருந்தான். சற்று நேரம் கழித்து அவன் தனது ஈரம் படிந்த கண்களே ஆண்ட்ரோ பக்கம் திருப்பி, 'அசடன்’ என்று சொன்னன். பாவம் மார்டின் ஸாகியன். அவ னு க் கு படர்ந்த முகமும் அடர்ந்த புருவங்களும் இருந்தன. அவன் சிரித்தால் அழுதுகொண்டிருப்பதுபோல் தோன்றும். அப்படிப்பட்ட ஆள் அவன். அவன் ஸ்ட்ரெச்சரில் கிடந்தபோது, அலட்சியமாக என்ருலும் சிரமத்தோடுதான், கால்மேல் கால் போட்டிருந் தான். அவன் மறுபடியும் அழுதிருக்கவேண்டும் எனத் தோன்றியது. கிழட்டு நாய் பசார் அவன் தம்பி வீட்டின் முற்றத்தில் குரைக்கத் தொடங்கியது. அவர்களுடைய தாயின் கவலை