பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 7 8 ஆகஸ்ட் மலும் மயிர் பிய்ந்துபோகாமலும் இருக்கும். அவளே அடிக்கத் தொடங்கினுள். தோள்களில், மார்பில், வயிற்றில், முதுகில், பின்புறத்தில் தாக்கிள்ை. அப்புறம் மறுபடியும் தோள்கள், மார்பு, வயிறு, முதுகு, பின்புறம் எல்லாம் அறைந்தாள். பிறகு, முதுகை மட்டும் குறிவைத்துத் தாக்கினள். திரும்பத் திரும்ப அடித்தாள். வலித்தது என்று நிச்சயப்படுத்தவும், மற்றவர்கள் பார்வையில் படக்கூடிய விதத்தில் கறுப்பாகவும் நீலமாகவும் தழும்புகள் படியாதவாறும் அவள் அறைந்தாள். பின்னர் அவளுக்குக் குடிப்பதற்குச் சிறிது தண்ணிர் கொடுத்தாள். கூந்தலை வாரிமுடிப்பதற்காகத் தனது சீப்பையும் தந்தாள். அப்புறம் அவள் மரியத்தின் தலைக்குட்டையைத் திரும்பக் கட்டினள். அவளுடைய வாளியையும் தானே தூக்கிக்கொண்டு நடந்தாள். ஏனெனில், மரியம் நேராக நடக்க இயலாது தள்ளாடினள்.