பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魔8剑 கிளைபடர்ந்த வில்லோ மரமும் அசைந்தாடும் நாணலும் துடைத்தான். தன்னை மீண்டும் அதில் கண்டுகொண்டதும் அவன் புன்னகை புரிந்தான். எனக்கு என்ன லாபம் என்ரு நீ கேட்கிருய்? நான் என்னையே அடைவேன் என்பது உண்மையாகவே உனக்குப் புரியவில்லையா? கடவுளே, அது அற்பமான விஷயம் இல்லையே! ஹே...?-என்று நெர்ஸஸ் மாஷன் எண்ணினன். 'iணுக நீ விஷயங்களைக் குழப்புகிருய். பெண்ணின் குரல் மீண்டும் கேட்டது. ‘எப்படியிருப்பினும் உன் மூதாதையர் என்னைச் சந்தித்தபோது சந்தேகங்களில் சிக்கவில்லை.” நெர்ஸஸ் மாஷன் ஸ்நான உடையின் இடுப்புப் பட்டையை இறுக்கிக் கட்டினன். முன் அறைக்குள் வந்தான். அவனது ஈரக் கால் தடங்கள் தரையில் பதிந்தன. இதற்கு என்ன சொல்கிருய்?’’ வீடு எச்சரிக்கையோடு விசாரித்தது. நான் என்ன சொல்ல? முதலாவது, அவர்கள் சந்தேகம் கொள்ளவில்லை என்ருல் அவர்கள் தங்கள் நாட்டில் பிறந்தார்கள், தங்கள் நாட்டில் வாழ்ந்தார்கள், தங்கள் நாட்டிலேயே செத்தார்கள் என்பது காரணமாகலாம். அங்கே வசித்தபடி அவர்கள் இரவு நேர வானவெளி முழுவதின் கீழும் பரந்து கிடக்கக் கூடிய துரத்து நாடுகளைப்பற்றிக் கனவு கண்டிருக்கக்கூடும். நிச்சயம், அவர்கள் கனவு கண்டிருப்பார்கள். அதற்காக அவர்கள் வெப்பமான கோடை இரவுகளில் வீட்டின் மொட்டை மாடிகளில் படுத்து, மலைகளிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இரண்டாவதாக, ஒருவன் தன்னேடு தனியாக இருக்க வழி இல்லை என்கிறபோது இந்தக் கதை எவ்வளவு தூரம் போகும்? -ஈரக் கால் தடங்கள் படுக்கை அறைக்குள் போயின. பிறகு ஒரு கால் தடத்தைச் சரியாக வாசல்படிமீது அரைவாசி ஆக்கி விட்டுக் கதவு அடைத்துக்கொண்டது. குதிகால் முன் அறை யிலும் விரல்கள் படுக்கை அறையிலும் பதிந்தன. நல்லது, கதவைச் சாத்தியதன் கருத்து என்ன? நெர்லஸ் மாஷன் அரைக்கண் மூடிச் சாய்ந்த நிலையில் நினைத்தான். எங்கிருந்து ஏன் வந்தாள் என்று எவரும் அறியாத பெண்ணின் முதுகந்தண்டுமீது தன் சுட்டு விரலை எச்சரிக்கையாக ஊர்ந்து செல்லும்படி செய்தான். பிறகு அவள் தோள் பட்டைகள்மேல் நகர வைத்தான். நீ கதவைச் சாத்திவிட்டாய். மெத்தவும் சரி. ஆளுல் இந்த வீட்டில் நாம் எங்கே ஒளிய முடியும்? நாம் எப்படித்