பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள் #31 வாகன் டோடோவென்ட்ஸ் (1893–1938) டோடோவென்ட்ஸ் மேற்கு ஆர்மேனியாவில், மெஸ்ரே நகரில் பிறந்தார். பின்னர் அவர் அமெரிக்கா சென்ருர். அமெரிக்காவில் விஸ்கான்ஸின் யுனிவர்சிட்டியில் வரலாற்றுப் பகுதியில் கற்றுத்தேர்ந்தார். 1922-ல் அவர் சோவியத் ஆர்மேனியாவுக்குத் திரும்பி வந்தார். முக்கியப் படைப்புகள் : 'டோனே’’ (கதை); அமெரிக்கா’ முதலிய பல சிறு கதைகள். "அஸாதுரும் கிளியோபாட்ராவும் (கதை); "பாகு’’ (நாவல்) 'புராதன ரோமாபுரிப் பாதையின் வாழ்வு’’ (கதை); 99 مييج 'புருக்கள்', 'நீல மலர்கள்’’ (கதைகள்). அக்செல் பாகுன்ட்ஸ் (1899–1937) பாகுன்ட்ஸ் கோரிஸ் நகரில் பிறந்தார். திபிலிஸி யுனிவர் சிட்டியிலும், கார்கோவ் விவசாயக் கழகத்திலும் கல்வி பயின்ருர். சிறந்த மனிதாபிமானக் கலைஞராகவும், சர்வதேச சகோதரத் துவம் என்ற கருத்தின் தீவிர ஆதரவாளர் என்றும் ஆர்மேனிய இலக்கிய வரலாற்றில் அக்செல் இடம் பெற்றிருக்கிரு.ர். முக்கியப் படைப்புகள் : 'ஹோனர் என்ற பெண்’ எனும் சிறுகதைத் தொகுதி. 'சிறுகதைகளும் கட்டுக்கதைகளும்.’’ 'ஒவான்டன் படையெடுப்பு' மற்றும் 'கார்ம்கார்’ நாவல். -