பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 g வல்லிக்கண்ணன் புதுமை பழமை இரண்டிலும் அழகுடை புத்துணர் கருத்தைச் சொலல்லொன்றே! இப்படி ஒரு பேட்டியில் கவிஞர் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகிறார். வழிவழி மரபில் எழுதியவரும் தான் வல்ல புதுமை நாடுகிறார், இழிநிலை இலக்கியம் படைக்கும் அறியார் இது புதுக்கவிதை யென்றேத்துகிறார். ஒழிநிலை இதுவே! உணர்ந்தவர் உயர்ந்தவர் உள்ளத் துடுள சிந்தனைகள் எழுநிலை மரபோ, புதுமையோ இரண்டிலும் இருகண் ஒரு நோக்காயிருக்கும்!" அழகுடைய புதுமைக் கருத்துக்களை எவ்வழியிலும் சொல்லலாம் என்ற எண்ணமுடைய பெருங்கவிக்கோ. ஒரு குறுங்காவியத்தில் மரபுவகைப் பாக்களுடன் புதுக் கவிதை முறையையும் இணைத்து எழுதியிருக்கிறார், அத்துடன் தனித்தனிப் பாடல்கள் பலவற்றை புதுக் கவிதைகளாகவும் அவர் பாடியுள்ளார். அவை எழுது கோலே! உனக்கு ஒர் எச்சரிக்கை!" என்ற பெயரில் ஒரு தொகுப்பாகப் பிரசுரம் பெற்றுள்ளன. எழுதுகோல் பிடித்து எழுதும் தன்னையும், மேழி பிடித்து உழுத தன் தந்கையையும் ஒப்பிட்டு எழுது கோலே, உனக்கு எச்சரிக்கை!" என்ற கவிதையை அவர் இயற்றியிருக்கிறார். - - உழவுத் தொழில் புரிவோர் "தலைமுறை தலைமுறையாக ஒயஒயக் கொடுவயலில் உழுதுகொண்டே இருக்கின்றனர்!