பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 277

பேயினை வேத முணர்த்தல் போல் - கண்ணன்

பெற்றி உனக்கெவர் பேசுவார்”

என்று திருதராட்டிரன் சகுனியிடம் இடித்துக் கூறுகிறான். திருதராட்டிரன் வாயிலாகக் கூறப்படும் இந்தக் கவிதை வரிகள் ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்தனவாகும். சிறந்த மெய்ஞானக் கருத்துக்கள் கொண்டனவாகும்.

பாஞ்சாலியைத்துகில் உரியும் காட்சியில் பாரதி மிகவும் அற்புதமான வகையில் ரீமத் பாகவதத்தையே சுருக்கிக் கூறியது போல கண்ணனுடைய பெருமைகளையும் அருஞ்செயல்களையும் பாஞ்சாலியின் அபயக் குரலாக எடுத்துக் கூறியுள்ள பாடல் மிகச் சிறந்த பக்தி இலக்கிய வரிசையில் ஒன்றாகக் கொள்ளலாம். கண்ணனிடம் பாரதிக் குள்ள ஈடுபாட்டை இப்பாடல் வரிகள் மூலமாகத் தெளிவாகக் காண முடிகிறது. பாரதியின் கருத்தில் அவருடைய பாவனையில் பாஞ்சாலி பாரத அன்னையாகும். பாரத நாட்டின் பெண் குலத்தின் தலையாய பிரதி நிதியாகும். பாஞ்சாலியின் அபயக் குரல் அடிமைப் பட்டிருந்த பாரதத்தின் அபயக் குரலாகும்.

"அந்தப் பேயனும் துகிலினை உரிகையிலே உட்சோதியிற் கலந்தாள் - அன்னை உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள். "ஹரி, ஹரி, ஹரி, என்றாள் - கண்ணா அபயம், அபயம், உனக்கபயம் என்றாள் கரியினுக்கருள் புரிந்தே - அன்று கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய் கரிய நன்னிற முடையாய் - அன்று”