4.சாதி வேறுபாடுகளை நீக்கி மக்களை ஒன்றுபடுத்தும் பணியில்
94
பின்னர் இஸ்லாமிய சமயம், கிறிஸ்தவ சமயங்களின் தாக்கங்களும் ஆக்கிரமிப்புகளும், மதமாற்றங்களும் இந்திய சமுதாயத்தில் ஏற்பட்டன. நாடு அடிமைப்பட்ட போது நமது சமுதாயத்தில் வேரூன்றிப் போயிருந்த சாதி வேறுபாடுகளும் பாகுபாடுகளும் பெரும்அளவில் நமது ஒற்றுமையையும் சமுதாய வளர்ச்சியையும் பாதித்தது. இக்காலத்தில் பல சமூக சீர்திருத்தவாதிகளும் இந்திய சமுதாயத்தில் தோன்றி பழய பல உழுத்துப் போன பழக்க வழங்கங்களைச் சாடினர்.
"கண்மூடிப் பழக்கங்கள் எல்லாம் மண் மூடிப் போகட்டும்” என்றும் “கருணையில்லாத ஆட்சி கடுகி ஒழியட்டும்” என்றும் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றும் வள்ளலார் தமிழகத்தில் வலுவான சமூக சீர்திருத்தக் கருத்துக்களை நிறுவினர். விவேகானந்தர் மிகச் சிறந்த பணிகளை ஆற்றினார்.
விடுதலை இயக்கம் வீறு கொண்டு எழுந்த காலத்தில் பரிபூரண சுதந்திரம் என்னும் குறிக்கோளும் தேசீய விடுதலை இயக்கம் என்னும் புதிய ஆதர்சமும் பாரதியை முன் நிறுத்தியது. மகாகவி பாரதி நமது நீண்ட உயர்வான பாரம்பரியத்தில், சீரிய சிறந்த மரபுகளின் தொடர்ச்சியாக சாதீயக் கொடுமைகளை எதிர்த்தும், தேசீய ஒற்றுமையை வலியுறுத்தியும் முழுமையான விடுதலை லட்சியத்தை முன் வைத்தும் பல சிறந்த கருத்துக்களையும் பாடல்களில் உறுதிபட முன் வைத்தார்.
அந்தவகையிலும் பக்தி இயக்கத்தையும், ஆழ்வார்கள், நாயன்மார்களையும் பின்னர் வந்த சமூக சீர்திருத்தவாதிகளையும் தொடர்ந்து பாரதி பலவலுவான சமூக சீர்திருத்தக் கருத்துக்களை முன் வைத்து சாதிக் கொடுமைகளை எதிர்த்தும் சமூக சமத்துவக் கருத்துக்களை முன் வைத்திருப்பதைக் காண்கிறோம்.