பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 233 காலத்தரசன் பெயர்களேயதால் ஒப்பிடத்தக்கது. இதனை அவ்வாழ்வாரைப் பற்றிக் கூறுமிடத்து விளக்குவேன். திவ்ய சூரிசரிதத்தில் திருமாலடியவளான குமுத வல்லி என்ற கன்னியை அடையும் பொருட்டுப் பரகாலர் தாம் கொண்டிருந்த சைவத்தன்மையை நீங்கி ஒப்பற்ற வைஷ்ணவத் தன்மையை அடைந்து பின் அக்கன்னியை மணம் புரிந்து கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது. இஃது ஏனைய நூல்களிற் காணப் படாத புதுச்செய்தியேயாம். ஆயின், இதற்கு ஒரு குறிப்பும் அவர் திருவாக்கிற் காணப்படவில்லை. எந்தை தந்தை தம்மா னென்றென் றெமரேழ் ஏழளவும், வந்து நின்ற தொண்டர்' (பெ. தி. 4.9.9) 14 எந்தாதை தாதை யப்பா லெழுவர் பழவடிமை வந்தார் " (க்ஷ7, 2, 6) * எம்மானு மெம்மனையு மென்னைப்பெற் றொருந்ததற்பின் அம்மானு மம்மனையு மடியேனுக் காகிநின்ற...சுடரே " ( க்ஷ7, 2, 9, 8) என்று பரம்பரையாகத் திருமாலுக்கடிமையுற்ற தம் குலச் சிறப்பையும், கருவிலே அமைந்த தம் வைஷ்ணவத் திருவினையும் ஆழ்வார் தெளிவாகக் கூறுதலால், திவ்ய சூரிசரிதக்கூற்றின் உண்மை நம்மனோரால் அறிதற்கரி தாம் என்க. இவ்வாழ்வார் தம் சிறியதிருமடலில்“ வாரார் வனமுலை வாசவ தத்தையென் றியாரானுஞ் சொல்லப் படுவா ளவளுந்தன் பேராய மெல்லா மொழியப் பெருந்தெருவே தாரார் தடந்தோட் டளைக்காலன் பின்போனாள் ”