பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

262 ஆழ்வார்கள் காலநிலை இவ்வித்துவக் கோட்டைமட்டும் அடியோடு மறந்து சென்றதற்கும், வித்துவக்கோட்டைப் பாடிய இவ் வாழ்வார் மற்ற மலையாளத்திருப்பதிகளை முற்றும் மறந்ததற்கும் காரணமென்னை? மலைநாட்டை அடுத் திருந்தவரால் அறிந்தபிமானிக்கப் பெற்ற அதன் பழங் திருப்பதிகள் அந்நாடாண்ட அடியரான அரசரால் அபிமானிக்கப் படாமற் போனது வியப்புக்கு உரிய தேயன்றோ ? ஆகவே, குலசேகராழ்வார்க்குப் பரிசயமுள்ள தும் நம்மாழ்வார்க்குப் பரிசயமில்லாததுமான பிரதேசத்துள் ளதே, பெருமாள் திருமொழியிற் பாடப்பெற்ற வித்துவக் கோடு-என்று கொண்டாலன்றி மேற்கூறிய கேள் விக்கு ஏற்ற சமாதானங் காண்டல் அரிதாகும். இனி, வித்துவக்கோடு எனப்பெயரிய திருப்பதி, குலசேகரர்க்குரிய கொல்லிநகர்ப் பக்கத்தினும் ஒன்று உள்ளதாகத் தெரியவருமாயின், அதுவே அப்பெரியா ரால் மங்களாசாஸனம் செய்யப்பெற்றது என்று எளிதிற் கருதக்கூடியதன்றோ ? மாகவித்வான் ஸ்ரீரா. இராக வையங்கார் ஸ்வாமி என்னிடம் இதுபற்றிக் கூறிய அரியசெய்தியொன்று ஈண்டு வெளியிடற்குரியது. அஃதாவது சேரரது பழந்தலைநகரான கருவூரிலே ஆன் பொருநை நதிக்கரையில் திருமால் திருக்கோயில் கொண்டுள்ள பகுதிக்கு வித்துவக்கோடு என்ற பெயர் வழக்குண்டு என்பது அக்கோயிலைச்சூழப் பிராமணர் வாழும் தெருக்களை வித்துவக்கோட் டக்கிரகாரம் என்று அப்பக்கத்தார் இன்றும் வழங்கி வருவதால் விளக்க மாகின்றது” என்பதேயாம்.