பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

268 ஆழ்வார்கள் காலநிலை பாண்டியன்' என்றும் சிறப்புப்பெயருடையராயிருந்தவர் என்பது தெரியலாம், வீரசோழன் 1 என்பான் முதற்பராந்தக சோழன் காலத்தே அவன் கீழ்ப்பட்டிருந்த சேரவேந்தனாவன். இவ் வாறே வீரபாண்டிய தேவன் என்ற கேரளவரசன் *பாண்டியன்' என்ற பட்டப்பெயரோடு இராசகேசரி வர்மன் 2 என்ற சோழர்க்குரிய சிறப்புப்பெயரையுந் தரித் திருந்தான், இவற்றினின்று, கொங்கரசர், சோழ பாண்டிய மரபுகளோடு தொடர்புடையராயிருந்தவர் என்பது பெறப்படுகின்றது. குலமுறை இதற்கேற்ப, முதலாம் ஆதித்தன் காலத்தவனான கோக்கண்டன் இரவி, வீரநாராயணன் என்ற சோர் தம்மைச் சந்திராதித்த குலத்தவர் 3 என்று கூறிக் கொள்ளுதல் குறிப்பிடற்பாலது. இதற்குப் பாண்டியரது சந்திரவமிசமும் சோழரது சூரியவமிசமும் ஆகிய இரு பெருமரபினையுஞ் சார்ந்தவர் என்பது பொருளாகும். ஆகவே, கொங்குநாடாண்ட. சேரர், பாண்டியசோழ மரபினரென்பதே தெளிவதால் காண்க. மருமக்கட்டாயமுறை இக்காலத்தே தோன்றிய தாயின், கேரளப்பெண்களை மணந்துவந்த தந்தையர் 1. இவன் முன்னோருள, மணிகுட்டுவன் என்பவ னொருவன் நாமக்கல் சாஸனத்திற் காணப்படுதல், சேரன் - செங்குட்டுவனை நினைப்பூட்டுகின்றது. (Ep.Rep. No 29 of 1906; Ind. Ant. Vol ix. pp 47-50). 2 Ep. Rep. 544, 546. - 3. கோயம்புத்தூர் ஜில்லா, வெள்ளலூர்ச் சாஸனம் {Ep. Rep. 147 of 1910;Ep. Ind. ii, pr. 79-82).