பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

271 குலசேகரப்பெருமான் என்ற பாடமும், (நம்பூரிப்) பிராமணரான ரவி என்ப வரும் (வாரியப்) பாரசவரான லோகவீரன் என்பாருமாகிய வித்வான்கர் இருவர் குலசேகரர்க்குப் பெரு நண்பிரான வர் என்ற கருத்தமைந்த பொருளுங் காணப்படுகின்றன என்றும், குலசேகரர் என்ற கேரளவேந்தரை யுதிஷ்டிர விஜயம்' என்ற தம் நூன்முகப்பிற் புகழும் வாசுதேவர் என்ற கவி, தம்மை ரவிபூ' என்று-தாமியற்றிய திரிபுர தகனம்' என்ற வேறு நூலில் கூறுவதனாலும், 'ரவிபூ' என்பதற்கு ரவிபுத்திரரான வாசுதேவர் என்று -அத்திரி புரதகன உரையாசிரியரும் 13-ம் நூற்றாண்டினருமான -- நீலகண்டர் பொருள் குறித்திருப்பதனாலும் பரவி' என் பவர்க்குப் புத்திரரே வாசுதேவர் என்பது தெளிவா மென்றும், அதனால் அந்த ரவியே குலசேகரர் காலத்தவ ராய் அவரால் முகுந்த மாலையிற் கூறப்பட்டவராதல் வேண்டுமென்றும், ஆகவே குலசேகராழ்வார்காலம் அப் பெயர்பெற்ற கேரளவேந்தர் விளங்கிய 9ஆம் நூற் றாண்டின் முற்பாதியாம் என்றும் அறிஞர்' கூறுவர். இக் கருத்து அருமையுடையதேயாம். • ஆயினும் இதன் முடிபை ஒருதலையாக நாம் துணி யக் கூடவில்லை. முகுந்தமாலைக்குத் தமிழ்நாட்டும் வழக்குமிகுதியுண்டு. 'கவிலோகவீரௌ' என்பதும் பத்ம சராவ பூதாம் என்பதுமே இங்கெலாம் வழங்கும் பாடங் கள். இதனால், மலையாள நாட்டிலுந் தமிழ் நாட்டிலும் வழங்கும் அவ்விருவகைப் பாடங்களுள் எது ஆழ்வார் காலத்தது என்பது தெளியப்படாத நிலையில் அக் கருத்து ஏற்கக்கூடியதன்று. 1, திருவனந்தபுரம் சாஸனவிலாகாத் தலைவரான ஸ்ரீமான், இராமநாத ஐயரவர்கள் இங்ஙனம் கருதினர். (T. A S. Vol. pp. 109-11.)