பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

64| ஆழ்வார்கள் காலநிலை இனி, அவ்வாழ்வார்கட்கு உரிய காலமாக மற்றொருவர் எழுதிய , கருத்தொன்றையும் இப்போது எடுத்துக்கொண்டு ஆராய்வது அவசியமாயுள்ளது. முதற்றிருந்தாதியுள் (77) “ வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவு மஃகாத பூங்கிடங்கி னீள்கோவற் பொன்னகரும் --நான்கிடத்தும் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றாற் கெடுமா மிடர் என்பது பொய்கையார் பாசுரம்: இதனுட் கூறப்பட்ட வேங்கடம், விண்ணகர், வெஃகா, கோவல் என்ற நான்கு. தலங்களும், பலலவரது தொண்டைமண்டலத்தைச் சார்ந்தனவே என்றும், திருமாலின் இருந்ததிருக்கோல முடையதாக நிரனிறையால் இப்பாட்டிற் கூறப்படும் விண்ணகர், தொண்டைநாட்டில் இல்லாததும் நின்ற திருக்கோல முடையதுமான திருவிண்ணகர் (உப்பிலி யப்பன் கோயில்) ஆகாமையால், காஞ்சீபுரத்துள் அத்திருக்கோலத்தோடுள்ள பரமேச்சுர விண்ணகரமே ஆகும் என்றும், இவ்விண்ணகரம் 8-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பல்லவமல்லனுக்கு முன்பு ஆண்ட பரமேச்சுரபல்லவனால் தன்பெயரிட்டு நிருமிக்கப் பெற்ற தாகலின், அதனைப் பாடிய பொய்கையார் முதலியோர் அக்காலத்துக்குப் பின் வாழ்ந்தவராதல் வேண்டும் என்றும் கருதினர், அறிஞர் சிலர்.1 விண்ண கரம் என்பது "விஷ்ணுக்ருகம்' என்ற வடமொழித் தொடரின் திரிபாகும். தொண்டைநாட்டில் பரமேச்சுர விண்ணகரம் ஒன்றே அத்தொடர் கொண்டுள்ளதா | Tamil studies, pp. 301-2,