பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 ஆழ்வார்கள் காலநிலை விண்ணகரம் மூன்றனுள் பழையதொன்றைப் பற்றிய தாகவே கொள்ளத்தகும். இவற்றால், முதலாழ்வார் திருமழிசையாழ்வார் கட்குப் பிறர்கூறிய 8-ஆம் நூற்றாண்டு சிறிதும் ஏற்காததென்பதும், முதல் நந்திவர்மன் (கி, பி. 534), சிம்மவிஷ்ணு (கி. பி. 590) போன்ற பரம பாகவதர் களான அரசர்களாட்சியில் முதலாழ்வார்களும், மகேந் திரவர்மனான குணபரனதாட்சியில் திருமழிசையாரும் விளங்கியவர்கள் என்ற என்கருத்து எவ்வகையினும் பொருந்துவதா தலும் அறிந்துகொள்ளத்தக்கன, இனி, ஆக்கவுங் கெடுக்கவும் பாடவல்ல ஆற்ற லுடையராய் முக்காலமுமுணர்ந்த முனிவர்களாகப் பொய்கையார், பூதத்தார், குடமூக்கிற் பகவர், காரைக்காற் பேயம்மையார், திருமூலர்- என்றிவர்களை 1. நந்திபுர விண்ணகரத்தை “நந்தி பணிசெய்த நகர்” என்று திருமங்கை மன்னன் பாடுவர் (பெரியதிரு. 5,10,7.) நந்தியென்பது அரசனொருவன் பெயரென்று பூர்வ வியாக் யானம் பொருள் கூறும். ஆகவே, இந்நந்தி பல்லவருள் ஒருவனாதல் வேண்டும். இரண்டாம் நந்திவர்மனான பல்லவ மல்லனை விடுவித்தல் வேண்டி அவன் சேனாபதி இந்நந்திபுரத் திற்குச் சென்று போர் நடத்திய செய்தி உதயேந்திரசாஸ னத்தால் அறியக்கிடக்கின்றது. அதனால், அப்பல்லவன் உண்டாக்கிய ஊராக இத்தலத்தைச் சொல்வதற்கில்லை. முதல் நந்திவர்மன் பரமபாகவதன் என்று சாஸனங்களிற் கூறப்படுகின்றான். இவனால் தன் பெயரிட்டு நந்திபுர விண்ணகரம் நிருமிக்கப்பட்டிருத்தலும், தம் நாட்டில் திரு மாலடியனான அவன் கட்டியன அக்கோயிலை ஆழ்வார் பாடி யிருத்தலுங்கூடியனவேயாம். விண்ணகரம் என்று பொய் கையார் கூறியதலத்துக்குப் பரமபதம் என்று பழைய வியாக் பானம் பொருள் கூறுகின்றது.