பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

பேசிக் கொண்டே புதல்வியை நிமிர்ந்து பார்த்தாள் மீனாட்சி அம்மாள். மகளின் கலக்கமடைந்திருந்த அந்த முகத்தைக் கண்டதும் பெற்ற வயிறு பதறி விட்டது.

"ஊர்வசி! ஏனம்மா கலங்கிப் போய் நிற்கிறே? எங்கேம்மா போயிருந்தே ராத்திரி ? உன்னைப் பத்தி நீ ரொம்ப அக்கறையும் கவலையும் கொண்ட தங்கக் கம்பியாச்சே நீ? பின்னே எங்கேம்மா ராத்திரி தங்கியிருந்தே? சொல்லம்மா ஏன் பேசாமல் நிற்கிறே, பேயடிச்ச வளாட்டம் ”

மீண்டும் ஊர்வசி மெளனம் சாதித்தாள்.

அவளை நெருங்கினாள் முதியவள்.

“நம்ம தமிழ்ச் சமுதாயத்திலே பொம்பளைக்குள்ள கட்டுத் திட்டங்கள் ஜாஸ்தி. ஆனா நமக்குள்ள எல்லை களோ குறைச்சல்! இப்படிப்பட்ட நிலையிலே, கன்னிப் பொண்ணான நீ ராத்திரி வீட்டுக்கு வரவில்லையின்னா, அதிலே உண்டாகக் கூடிய பின் விளைவுக உனக்குப் புரியாதாம்மா ? உன்னை மாலையும் கழுத்துமாகப் பார்த் திட்டுச் சாகிறதுக்காகத்தான் தாயே நான் என் உசிரை வச்சுக்கிட்டிருக்கேன். சத்தியமாய் இதானம்மா நடப்பு! கம்மனாட்டி வளர்த்த கழுசடைக் குட்டி என்கிற அவப் பேரை என்னாலே தாளமுடியாதம்மா! சொல்லு, மகளே! என்ன நடந்திச்சு? எங்கே ராத்திரிப் பொழுதைக் கழிச்சே! ஏன் அயலிடத்திலே ராத்திரி தங்கினே ? சொல்லு!"என்று கர்ஜித்தாள் மீனாட்சி அம்மாள்.

மீண்டும் மெளனம் காலத்தைக் கயளிகரம் செய்யவே அந்நரக வேதனையை மேலும் வளர்த்த விரும்பவில்லை அந்த அம்மாள்.

"சொல்ல மாட்டே?” என்று ஏங்காரமாக முழங்கிக் கொண்டே, ஊர்வசியின் கன்னங்களில் 'பளீரென்று' அறைந்தாள்.