பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரையிலும் திரைத்துச் சுருட்டிக் கொண்டும், காலர்களைப் பொத்தான் இடாமல் திறந்து போட்டுக் கொண்டும், பைலோ ரஷ்யாவின் தூசி மலிந்த ரோடுகளின் வழியே நடந்து சென்றனர். அவர்களது தலைக் கவசங்கள் அவர்களது பெல்ட் வாரோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன; அவர்களது மூடாத, வியர்வை படிந்த தலைகள் இந்த அன்னிய நாட்டின் இதமான சூரிய ஒளியையும் சுகமான காற்றையும் அனுபவித்தன, தமது பிளாஸ்க்குகளில் இன்னும் சிறிது ஒயின் தளும்பிக் கொண்டிருக்க, அவர்கள் சோவியத் கிராமங்களின் எரிந்து கரிந்த இடிபாடுகளின் வழியே விரைவாக நடந்து சென்றனர்; செல்லும் போதே, ஜெர்மானியர்கள் பாரீசுக்குள் புகுந்த காலத்திலேயே உண்மை யான போர் வீரர்களை முதன் முதலில் நேரில் பார்த்தவளும், உண்மையான ஆடவர்களிடம் தனது முதல் அனுபவத்தைப் பெற்றவளுமான ஜீன் என்னும் அழகிய பிரெஞ்சு யுவதியைப் பற்றிய ஆபாசமான பாட்டொன்றையும் உரக்கப் பாடிச் சென்றனர். இதன்பின் அவர்களுக்கு வாழ்க்கை அத்தனை சுகமாக இருக்கவில்லை. பகலிலும் இரவிலும் சரி, அவர்கள் நடந்து செல்லும் போதும் சரி, முகாமிட்டுத் தங்கியிருக்கும்போதும் சரி, கொரில்லாப் படைவீரர்களின் தொல்லைகளுக்கு அவர்கள் உள்ளானார்கள். ஆறே நாட்களுக்குள் அந்தப் படைப்பிரிவில் கிட்டத்தட்ட நாற்பது பேர் கொல்லப்பட்டனர்; காயமடைந் தனர். தலைமையகத்துக்கு ஒரு மோட்டார்சைக்கிளில் தகவல் கொண்டு சென்ற தூதுவன் என்ன ஆனாள் என்பதே தெரியாமல் மாயமாய் மறைந்து விட்டான். அதேபோல் ஆறு சாதாரணம்: போர்வீரர்களும் - ஒரு லான்ஸ் கார்ப்போரலும் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இந்த ஏழுபேரும் படைப் பிரிவுக்கு ஏதோ கொஞ்சம் உணவு தேடிக் கொண்டு வருவ தாகக் கூறி மிக அருகிலிருந்த ஒரு கிராமத்துக்குச் சென்றனர்; ஆனால் போனவர்கள் திரும்பவே இல்லை, ஜெர்மானியர்களோடு மகிழ்ச்சிகரமாக இருந்து வந்த அந்த அழகிய பிரெஞ்சு யுவதியைப் பற்றிய பாட்டும் இப்போது மிகமிகக் குறைவாகத்தான் கேட்டது, இங்குள்ள மக்கள் ஜெர்மானியர்களோடு மகிழ்ச்சிகர மாக இருக்க விரும்பவில்லை. அந்தப் படைப் பிரிவு, நாசமாக்கப் பாட்ட கிராமங்களுக்குள் புகுந்ததும், கிராமவாசிகள் காடு களுக்குள் ஓடி விட்டவர்கள்; தமது வீடுகளில் பின்தங்கி விட்டார் களோ, ஜெர்மானியர்களின் மீது தமது கண்களில் கனன்று கொண்டிருக்கும் பகைமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக, தமது பாதங்களையே உம்மென்று முறைத்துப்

பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஆடவர் பெண்டிரின்

94