பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரிஸிலிருந்து ரயிலில் வரும்போது, ரஷ்யர்களோடு நடத்தப் போகும் போர் எவ்வாறு இருக்கும் என்று அவர்கள் கற்பனை செய்திருந்தார்களோ, அவ்வாறு இப்போது இருக்கவில்லை. வெண்ணெயைக் கத்தி வெட்டிக் கொண்டு இறங்குவதுபோல், ரஷ்யாவுக்குள் அவர்கள் லகுவாக முன்னேறிவிட முடியும் என்று தான் அவர்களது அதிகாரிகள் அவர்களிடம் கூறியிருந்தனர். அவ்வளவு சுலபமாக எல்லாம் நிறைவேறிவிடும் என்று கூறி யிருந்தனர். ஆனால் இவையாவும் வெறும் ஜம்பப் பிதற்றல் தான் என்பது புலனாகிவிட்டது. இவ்வாறெல்லாம் அவர்களிடம் கூறிய அந்த அதிகாரிகளிற் பலரும், இந்த மாதிரி எதையும் மீண்டும் என்றுமே அவர்களிடம் கூற மாட்டார்கள். ஏனெனில் எங்கிருந்தோ வந்து தாக்கும் ரஷ்யத் துப்பாக்கித் தோட்டாக் களும், ரஷ்ய வெடிகுண்டுகளின் சிதறல்களும்தான், வெண் ணெயை வெட்டிக் கொண்டு இறங்கும் கத்தியைப் போல், உண்மையில் அத்தனை எளிதாக அவர்களது உடல்களின் வழியே புகுந்து சென்றன. அதே இன்று காலையில் நமது தாக்குதலின்போது பெர்க்மான் கைதியாகப் பிடிக்கப்பட்டார். நமது போர் வீரர்கள் அவரை நமது நிலவறைக்குள் கொண்டு வருவதற்கு முன்னால், அவரது கண்களைத் துணியால் கட்டிமறைத்துக் கூட்டி வந்தனர். . " நீங்கள் என்னைச் சுட்டுக் கொல்லப் போகிறீர்களா? என்று பெர்க்மான் நடுங்கும் குரலில் கேட்டார். போர் வீரர்களுக்கு ஜெர்மன் மொழி தெரியாததால் அவர்கள் பதிலளிக்கவில்லை. பெர்க்மான் பயத்தால் நடுங்கிக் கொண்டே நிலவறைக்குள் பிரவேசித்தார், அவரது கண்கட்டை அகற்றிய பின், தமக்கு முன்னால் ஒரு மேஜையைச் சுற்றிலும் பலர் அமைதியாக உட் கார்ந்திருப்பதைக் கண்டதும், அவர் ஆழமான நிம்மதியுணர் வோடு, மூக்கை உறிஞ்சும் சத்தம் எழும்ப, நீண்ட பெருமூச்சு விட்டார்; இதனைக் கண்டதும் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்த்து . அவர்கள் என்னைச் சுடப் போகிறார்கள் என்றுதான் நான் நினைத்தேன் என்று அவர் தம்மையுமறியாமல் எழுந்த பெரு மூச்சுக்கு விளக்கம் கூறும் விதத்தில், முணுமுணுத்தார்; மறுகணம் : அவர் அட்டென்ஷனில் நின்றார். ஓர் ஆசனத்தில் அமருமாறு அவரிடம் கூறப்பட்டது, அவர் தமது கைகளை முழங்கால்களின் மீது வைத்தவாறே ஒரு நாற்

காலிக்குள் பொத்தென்று அமர்ந்தார்.

96