பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிட்டும் நேரத்தைத் துரிதப்படுத்துவதற்காக, அவர் அயர்வு சோர்வின்றி உழைக்கிறார்; டான்பாஸில் ஜெர்மன் படையெடுப் பாளர்களோடு போரிட்டுக் கொண்டிருக்கும் போர்முனையிலுள்ள போர்வீரர், படு நாசமாக்கப்பட்ட தமது சொந்த உக்ரேனுக் காக மட்டுமல்லாமல், லெனின்கிராடு வாசிகளான உங்கள் மீது எதிரி சுமத்திவிட்ட மாபெரும் துயரங்களுக்காகவும், அவர்களை அடித்து வீழ்த்தி வருகிறார்,...முற்றுகை வளையம் உடைபடும் அந்த நேரத்தை, மாபெரும் சோவியத் நாடு லெனின்கிராடு நகரின்-நிரந்தரக் கீர்த்தியில் நீராடிய நகரின்--வீரம் செறிந்த புத்திர புத்திரிகளைத் தனது மார்போடு சேர்த்தனைக்கும் அந்த நேரத்தை, நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம், 1942 பகைமையின் விஞ்ஞானம் போரில், மரங்களும்---மக்களைப் போலவே-தமது சொந்தத் துர்ப்பாக்கியத்துக்கு உள்ளாகின்றன. நமது பீரங்கிப் படையின் குண்டுப் பிரயோகத்தால் வீழ்த்தப்பட்டுவிட்ட ஒரு பெரிய காட்டுப் பகுதியை நான் கண்டேன். எஸ், கிராமத்திலிருந்து வாபஸாகும் நிர்ப்பந்தத்துக்கு 2.ள்ளான ஜெர்மானியர்கள் இந்தக் காட்டில் நிலைத்து நிற்க விரும்பினர். ஆனால் மரங்களோடு சேர்த்து அவர்களும் தரையோடு தரையாக வெட்டி வீழ்த்தப்பட்டனர். முறிந்து முடமாகிப்போன பைன் மரங் களுக்கடியில் பத்து ஜெர்மன் போர் வீரர்கள் செத்துக் கிடந்தார்கள்; சிதறுண்டு போன அவர்களது உடலங்கள் பச்சை நிறக் காட்டுச் செடிகளுக்கு மத்தியில் அழுகிக் கொண்டிருந்தன; குண்டுகளால் பிளவுண்ட அடி.மரங்களின் பிசின் பயணம், அழுகிச் சிதைந்து கொண்டிருக்கும் சதையின் குடலைக் கு மட்டும் முடை நாற்றத்தில் அமிழ்ந்து போய்விட்டது, குண்டு வீச்சினால் குழி பறிக்கப்பட்டு, கரிந்து பொடிந்து சாம்பல் நிறமாகக் காட்சி பளித்த விளிம்புகளோடு கூடிய குழிகளைக் கொண்ட தரையே, மரணத்தின் விஷக்காற்றை வெளியிடுவது போல் எண்ணத் தோன்றியது. நமது குண்டுகளால் குழிபறிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த வெட்டவெளியின் மீது, மரணம் மெளனமான ஆணவத் தோடு ஆட்சி செலுத்தியது. அதன் மத்தியில் ஒரு பெர்ச் மரம் அதிசயமாக உயிர் பிழைத்து நின்றது. காற்று அதன் காயம் பட்ட கிளைகளை அசைத்தது; அதன் புதிய, பளபளப்பான, பசை

போன்ற இலைகளைச் சலசலக்கச் செய்தது.

103