பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறகு என் மனைவி என்னைச் சிரிக்கவைத்தாள். போருக்குச் செல்லும் கணவனை வழியனுப்புவது - ஒன்றும் அத்தனை வேடிக்கையான விஷயமல்ல என்பது உங்களுக்கும் தெரிந்தது தானே, இயல்பாகவே என் மனைவியால் அவளது சிந்தனைகளை ஒருமுகப்படுத்த முடியவில்லை. அவள் என்னிடம் ஏதோ முக்கிய மான விஷயத்தைக் கூறத் தொடர்ந்து முயன்று வந்தாள்; எனினும் அவளது சிந்தனைகள் குழம்பிப் போயிருந்தன; அவை என்னவென்பதே அவளுக்கு நினைவுக்கு வரவில்லை. அதற்குள் ரயில் புறப்பட்டுவிட்டது; அவள் எனது ஜன்னலுக்கு அருகில், மிக நெருக்கமாகப் பிளாட்பாரத்தில் நடந்து வந்தாள்; என் லகயைப் பாசத்தோடு பற்றிப் பிடித்துக்கொண்டு, 'விக்தர், உங்களுக்கு அங்கு சளி பிடித்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள், உங்கள் உடம்பைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!' என்று விரைவாகத் திரும்பத் திரும்பக் கூறினாள். 'நாத்யா, நிச்சயமாகப் பார்த்துக் கொள்கிறேன், எக்காரணத்தாலும் எனக்குச் சளி பிடிக்காது. போர்முனையில் பருவநிலை அற்புதமாக உள்ளது; உண்மையிலேயே முற்றிலும் மிதமாகவே உள்ளது' என்று நானும் கூறினேன். என் மனைவியின் இனிமையான, அர்த்தமற்ற வார்த்தைகள் பிரிவின் கடுமையான வேதனையை எனக்குக் குறைத்தது. கடவுளே! நான் அந்த ஜெர்மானியர்களை எத்தனை வெறிவேகத்தோடு வெறுத்தேன்!

  • வாருங்கள், துரோகத்தனம் படைத்த அண்டை நாட்டினரே,

இந்தப் போரை நீங்கள்தான் தொடங்கினீர்கள். எனவே இப்போ இது என்ன நடக்கிறதென்று பாருங்கள்! உங்களுக்கு என்ன நேரவேண்டுமோ அதனை நாங்கள் கொடுப்போம்; அதற்கு மேலும் கொடுப்போம்!' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். (கராசிமோவ் தூரத்தில் திடீரென்று தொடங்கிய எந்திரத் துப்பாக்கிப் பிரயோகப் பரிவர்த்தனையைக் கேட்டவாறே மௌனடO!”னார்; அந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நின்றதும், அவர் சட்டென்று மீண்டும் தம் கதையைக் கூறத் தொடங்கினார்: ""யுத்தத்துக்கு முன்னால் நாம் ஜெர்மனியிலிருந்து எந்திரங் : களைப் பெற்று வந்தோம். இந்த எந்திரங்களைக் கோத்திணைக்கும் போது நான் அதன் ஒவ்வொரு பாகத்தையும் குறைந்த பட்சம் ஐந்து முறையாவது தொட்டுப் பார்ப்பேன். அதனை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து பார்ப்பேன். அந்த எந்திரங்கள் நிச்சயமாகத் திறமைசாலிகளால் செய்யப்பட்டவைதான். மேலும் ஜெர்மன் நூலாசிரியர்களின் புத்தகங்களையும் நான் விரும்பினேன், எப்படியோ நான் ஜெர்மன் மக்களை மதிப்போடு

கருதிப் பார்ப்பதற்குப் பழகிப் போய்விட்டேன், அரும்பாடு )

109