பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரதிநிதி கள் எல்லா நாடுகளிலும் ரஷ்யாவைப் பற்றி அவதூறு களைப் பரப்பி வந்த போதிலும், 'சோவியத்' என்ற இந்தச் சொல் இப்போது உலகெங்கணும் புரிந்து கொள்ளப் பட்டுள்ளதோடு மட்டுமன்றி, பிரபலமாகவும் மாறியுள்ளது: தொழிலாளர்களுக்கும் சகல உழைக்கும் மக்களுக்கும் மிகவும் , பிடித்தமான சொல்லாகவும் மாறியுள்ளது.

  • 'சோவியத் ஆட்சி என்பது உழைக்கும் வெகுஜனங்களால்

கண்டு பிடிக்கப்பட்ட சோஷலிசத்துக்கான மார்க்கமாகும்; எனவே தான், அது உண்மையான மார்க்கமாக உள்ளது: எனவே தான் அது வெல்லற்கரியதாக உள்ளது” என்று கூறினார் லெனின், போருக்கும் சரி, ஆக்க பூர்வமான உழைப்புக்கும் சரி, நாம் நமது பலத்தை எந்த வற்றாத சுரங்கத்திலிருந்து பெற்று வருகிறோம் என்பதை நமது நண்பர்கள் அறிவர். - நமது எதிரிகளோ தமக்குத் தாமே விசுவாசமாக இருந்து வருகின்றனர்; சிலர் வெறும் அவதூறுகளில் இறங்குகின்றனர்; அதையும் கொச்சைத்தனமாக, தமக்கே உரிய வெட்கங்கெட்ட முறையில் செய்கின்றனர்; மற்றவர்களோ தமது தூசி படிந்து கிடக்கும் பழைய சுவடிகளை அவசரம் அவசரமாகத் தோண்டி யெடுத்து, மர்மம் ' மிகுந்த ஸ்லாவ் ஆன்மாவையும் “'ரஷ்ய வெறித்தனத்தையும் பற்றிய பழைய, செல்லரித்துப் போன வாதங்களை வெளிக் கொணர்கின்றனர்; இந்த நைந்து கிழிந்துபோன பழங் கந்தல் வாதங்களின் மூலம் தமது இழி தன்மையையும் கீழ்மையையும் மூடி மறைக்கின்றனர்; சோவியத் மக்கள் தமது பிரம்மாண்டமான பலத்தை . எங்கிருந்து பெறுகின்றனர் என்பதைத் தம்மால் புரிந்து கொள்ளவே முடி..!Tதது போல் பாசாங்கு செய்கின்றனர், பல்லாண்டுகள் அனுபவித்த துன்ப ... துயரங்களுக்குப் பின் னால், ஒரு மாபெரும் புரட்சிகரப் போராட்டத்தின் மூலம் நமது மக்கள் ஒரே நியாயமான. - அரசாங்க அமைப்பைக் கண்டறிந்தனர்; இதற்காக அவர்கள் உறுதியோடும் துணிவாற்ற - லோடும் போராடினர்; அதனைத் தமது ரத்தத்தாலும் தமது உழைப்பினாலும் வலுப்படுத்தினர்; இந்த அமைப்பில் அவர் களுக்குள்ள நம் பிக்கையை உலகில் எந்தச் சக்தியும் அசைத்து விட முடியாது.. அண்மைக் கடந்த காலத்தை நமது இன்றைய நிகழ்காலத் தோடு ' நீங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பீர்களானால், ரஷ்யர்கள்

ஆன்மீக ரீதியில் எவ்வளவு பெருமளவுக்கு மாறியுள்ளனர்.

143