பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருமாறு பார்த்துக் கொண்டோம்; இதனால் எல்லோரும் பிழைத்துக் கொண்டனர். அடேயப்பா! அந்த வசந்த பருவத்தில்தான் நாங்கள் எவ்வளவு கடினமாகப் பாடுபட்டோம்! 'சிலர் வெறும் எலும்பும் தோலுமாகத்தான் இருந்தனர்; சிறு காற்று வீசினாலும் கூட்ட, அது அவர்களைக் கீழே பிடித்துத் தள்ளி விடும், என்றாலும் அவர்களும் மற்றவர்களோடு சேர்ந்து வேலை பார்ப்பதற்காக வந்தனர்; தம்மால் முடிந்தவரையில் உழைக்கவும் செய்தனர். நமது மக்கள் தங்கம் என்றால் பத்தரை மாற்றுத் தங்கம்தான். தெரியுமா? அது மட்டும் நிச்சயம்." சூரியன் மேலெழுந்தவுடன் நாங்கள் அந்தக் கிராமத்தை விட்டுக் கிளம்பினோம். வெளியே வீதியில் வாடிப்போன வாத்துக் கால் இலைச் செடியின் காரமான இளம் மணம் வீசியது. டான் நதிப் பக்கமிருந்து பரபரத்த காற்று வீசிற்று. வானத்தின் வழியாக மிதந்து சென்று கொண்டிருந்த கனத்த மேகங்கள், இளஞ்சிவப்பான வரிவடிவத்தைக் கொண்ட கிளைகளோடு கூடிய உயரமான பாப்லார் - மரங்களின் மொட்டையான் உச்சி களில் சிக்கிக்கொள்ளும் அபாயத்துக்கு உள்ளாவதைப்போல் அத்தனை தாழ்வாக இறங்கித் தொங்கின. - அந்த அதிகாலை நேரத்திலும்கூட, தானியக் கிடங்குகளைச் சுற்றிலும் ஆரவாரமும் கூட்டமுமாக இருந்தது. இரு கிழவர்கள். தானியத்தைப் புடைத்துக் கொண்டிருந்தனர்; சுமார் ஒரு டஜன் வண்டிகள்-அஷவ் கதிரடிக்கும் களத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்தது. கடைசியிலிருந்த தானியக் கிடங்கில் தானியத்தை இறக்கிக் கொண்டிருந்தன. அங்கு ஒரு சிறு டிரக் வண்டியும் நிறுத்தப்பட்டிருந்தது. தனது பஞ்சு வைத்துத் தைத்த சட்டையைத் திறந்து போட்டுக் கொண்டும், தனது கம்பளிக்' குல்லாயைத் தலைக்குப் பின்னால் தள்ளி வைத்துக் கொண்டுமிருந்த நெட்டையான வாலிபனான அந்த டிரக் வண்டியின் டிரைவர், தரை தட்டிப் போன யருக்குக் கோபாவேசத்தோடு காற்று அடித்துக் கொண்டி ருந்தான்; அவனது வாய் ஓசையற்ற, எனினும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வசை மொழிகளை முணு முணுத்துக் கொண்டி ருந்தது.. - நாங்கள் எங்கள். வேழியே காரை ஓட்டிச் சென்றோம். சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்ற பின்னர், ரோட்டுக்கு அருகிலேயே ஒரு புத்தம் புதிய எஸ்டி இஸட்-என் ஏ டி ஐ டிராக்டர், கடகடத்துக் கொண்டே வந்து கொண்டிருந்தது. அதன் மீது பூசப்பட்டிருந்த பெயிண்ட் வர்ணமும்கூட. இன்னும்

இ. க-12

177