பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கலாகவும் அநேகமாக வண்ணங்களே இல்லாமலும் அடி வானத்தில் நேராக நிற்கிறது. ரோட்டின் இரு மருங்குகளிலும், ஒரு காலத்தில் டான் ஸ்டெப்பி' வெளியின் ராணியாக விளங்கிய, காஞ்சிரைச். செடிகளின் சாம்பல் நீல வர்ணம் படைத்த வரிசை: கோடு இழுத்தாற்போல் நெடுகிலும் செல்கிறது. தானியப் பயிர்கள் அதனைத் தனியுரிமையின் அகந்தையோடு ரோடு வரையிலும் தள்ளிக் கொண்டு வந்து, கிட்டத்தட்ட எங்கணுமே அதனை வெளியேற்றி விட்டன்; பரிதாபத்துக்குரிய அந்தக் கசப்பான காஞ்சிரைச் செடிகளை, கூட்டுப் பண்ணையின் "மேய்ச்சல் நிலங் கிளிலும், காடுகளிடையே தென்படும் வெட்டவெளிகளிலும், பள்ளத்தாக்குகளின் சரிவுகளிலும் மட்டுமே ஒரு நிச்சயமற்ற சுதந்திரத்தை அனுபவித்துக் கொள்ளுமாறு அவை விட்டு விட்டன. அந்தக் காஞ்சிரைச் செடிவரிசைக்குப் பின்னால், அதனை ஒட்டியே முற்றி வரும் ஓட்ஸ் தானியக் கதிர்களின் பசிய நீல நிறமான சுவர் எழுந்து நிற்கிறது. அந்தப் பயிர்கள் நூறு ஹெக்டர் பரப்புக்குப் பரந்துள்ளன; அதற்கும் பின்னால், மங்கிய திட்டுக்களோடு கூடிய ஒரு கரும் மஞ்சள் நிறமான வயலைக் காண முடிகிறது; அது முற்றுவதற்குத் தாமதமான கோதுமை அல்லது பார் லிப் பயிராகத்தான் இருக்க வேண்டும். அதற்கும் அப்பால் குத்திட்டு நிற்கும் சூரியகாந்திச் செடி களின் பெரிய 4. பாத்தி ஒன்று உள்ளது. அதற்கும் தள்ளி, மாரிக்காலக் கோதுமைப் பயிரின் பரப்பை நாங்கள் காண்கிறோம்; அது காற்றினால் வளைந்து, மங்கிய பொன்னொளியோடு பளபளக்கும் கதிர் உச்சிகளோடு, கனத்து இறுகிப்போன அலைப்பரப்பாகக் கிடக்கிறது. இரண்டு அறுவடைக் கம்பைன் எந்திரங்கள் வயலின் குறுக்கே ஊர்ந்து செல்கின்றன; அவற்றின் கருங்க பில நிறப் பக்கங்களில் சூரியன் சற்றே பிரதிபலிக்கிறது. ஸ்டெப்பிவெளி இங்கு சம சீராக இல்லை ; எனினும் காணும் காட்கீ மட்டும் எல்லையற்றதாக உள்ளது; மேலும் அடிவான விளிம்பும் புவனாகலே காணோம்... நீல நிறப் பனிமூட்டம் அகன்ற பள்ளத்தாக்கின் ஆழங்களில் கனத்து வருகிறது; அது சரிவின் மறுபக்கத்தின் மீது இள நீலப் பனித் திரையா கக் கரைகிறது; ரோட்டிலிருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில் அது வானத்தோடு தந்திரமான முறையில் ஒன்று கலக்கிறது. அடிவானத்தின் மங்கலான வரி வடிவத்தை எடுத்துக் காட்டுவதற்கு, தனது உறுதியான அல் தி வாரத்தைக் கொண்ட தன்னந்தனியான காவல் குன்று ஒன்று,

மட்டுமே உள்ளது.

183