பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பான் ஃபெரே !! ைடேப் பற்றி மேலும் எதுவும் கூற வேண்டிய அவசியமே ஒருவேளை நேராது போயிருக்கலாம். என்றாலும், இப்படித்தான் அவரது உருஸ்தி எழுதப்பட் டுள்ளது, எனது கருத்தை நிரூபித்துக் காட்டுவதற்கு, பான்ஃபெரே -விடம் கலாசாரத் துறை நபரிடம் இருக்க வேண்டிய மொழியறிவு இல்லாமை, வார்த்தைகளை அவர் கவனமே இல்லாமல் பயன்படுத்துவது, அவரது அறியாமை ஆகியவை சம்பந்தமாக, கார்க்கி மேற்கோள் காட்டிய உதாரணங்களைப் பெருக்கிக் கொண்டு செல்ல வேண்டியதும் அவசியமில்லை. புருக்கியின் மூன்று பாகங்களையும் கவனமாகத் திரும்பப் படித்துப் பார்ப்பதன் மூலம் எவரும் இதனைத் தாமே கண்டு கொள்ளலாம். பான்ஃபெரோவின் நூலைப் பற்றி ஒரு விமர்சன பூர்வமான ஆய்வுரை செய்வது எனது நோக்கம் அல்ல; எனது கவலை யெல்லாம் இதுதான்: கார்க்கியின் கட்டுரை வெளிவருவதற்கு முன்னால், புருஸ்கியில் மலிந்து கிடக்கும் இந்த அப்பட்டமான குறைபாடுகளை விமர்சகர் கள் எவருமே எப்படிப் பார்க்காது போக முடிந்தது என்பதுதான். உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் பரவலாகத் தெரிய வந்துள்ள ஒரு நூலாசிரியர் ஒன்றன் பின் ஒன்றாய் அடுத்தடுத்து நூல்களை வெளியிட்டு வந்துள்ளார், ஆயினும் அந்த நூல்கள் அனைத்திலும் இலக்கிய வழுக்கள் நிறைந்துள்ளன என்றால் அது எப்படி நிகழ முடியும்? சந்தேகமின்றி, விமர்சகர்கள் இந்தத் தவறுகளைக் காணத் தான் செய்தனர்; என்றாலும் இவற்றைப் பற்றி அவர்கள் ஏதாவது குறிப்பிட்டாலும்கூட, அதனைத் தெளிவற்ற, உள்ளடங்கிப் போன பம்மிய குரல்களில்தான் குறிப்பிட்டனர்; அதே சமயம் பெரும்பாலோர் வெறுமனே தங்கு தடையற்ற புகழ்மாலைகளையே தொடர்ச்சியாகப் பாடிக் கொண்டிருந்தனர்; இந்தப் புகழ்ப்பாக்களை இயற்றுவதில் அவர்கள் அத்தனை கற்பனை வளம் படைத்தவர்களாக இல்லாத காரணத்தால், புருஸ்கியில் எல்லாவிதமான சிறப்புக்களும் அப்படியே ததும்பி வழிகின்றன என்று எப்பாடுபட்டேனும் வாசகர்களுக்கு உணர்த்திவிட வேண்டும் என்பதற்காக, வெறுமனே பான்ஃபெரோவை மற்றொரு பால்ஸாக்காகவும், மற்றொரு உஸ்பென்ஸ்கியாகவும் புகழ்ந்து பாராட்டும் மிகவும் எளிய உத்தியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். லித்தரத்துர்னி பிடிக், எண் 4, 1933 சஞ்சிகையில் வெளி வந்த வாசில்கோவ்ஸ்கியின் கட்டுரை இத்தகைய புகழாரம் சூட்டும் கமர்சனத்துக்கு ஒரு சரியான உதாரணமாகும். இந்தக்

216

216