பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தைக் கவரும் நினைவுச் சின்னமாகும் என்ற கூற்றோடு கட்டுரையை முடிக்கிறார்; அத்துடன் கொஞ்சங் கூட வெட்க மின்றி இவ்வாறு எழுதி முடிக்கிறார்: பான்ஃபெரோவ் தமது நாவலின் நான்காவது பாகத்தை எழுதி வருகிறார். அவர் மேலும் பல பாகங்களை எழுதுவார் {அது பதினைந்தோ அல்லது இருபதோ, அதெல்லாம் விமர் சிக ரின் கற்பனை வீச்சுக்கு அப்பாற்பட்டது); அதன் பின் கூட்டுடைமையாக்கம் தனது சொந்த ஹ்யூமன் காமெடியைப் பெற்று விடும். - ஓ! நல்லது. நினைவுச் சின்னத்தைப் பொறுத்தவரை , எத்தனை எத்தனையோ நினைவுச் சின்னங் கள் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரியும் , வாசில்கோவ்ஸ்கியின் கட்டுரையும் வருங்காலத் தலைமுறையினரால், விமர்சகர்கள் பொறுப்பற்ற கட்டுரை களை எழுதி வந்த கடந்த காலத்துக்குச் சான்றான ஓர் உறுதியான நினைவுச் சின்னமாகவே கருதுவார்கள் என்று நான் . ஆழமான திட நம்பிக்கை கொண்டுள்ளேன். தமது நல்வாழ்த்துக் களை ஒவ்வொருவரும் தாராளமாகத் தெரிவித்துக் கொள்ள லாம் என்பது உண்மைதான். ஆயினும், பான் ஃபெரோவ் வாசில்கோ வ்ஸ்கியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து, தாம் புருஸ்கியின் முதல் மூன்று பாகங்களை எழுதியதைப் போலவே, மேலும் 15 அல்லது 20 தொகுதிகளை எழுதுவராயின், அது இனியும் இலக்கிய விவாதத்துக்கான ஒரு விஷயமாக இருக் காது, மாறாக அது ஒரு பெரும் இயற்கையின் உற்பாதமாகவே இருக்கும் என்று கூறி, பான்ஃபெரோவை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் உச்சரிப்பதே, ஒரு விமர்சகர் என்ற முறையில் வாசில்கோவ்ஸ்கியின் கடமையாகும். லித்தரத்துர்னி கிரிட்டிக் சஞ்சிகையின் அதே இதழில், 4 'தொழிலின் நலன்கள்" என்ற தலைப்பில் கோர்னெலி ஜெலின்ஸ்கி எழுதிய ஒரு கட்டுரையும் இருந்தது. அதில் வாழ்க்கையை பற்றிய ஞானத்தை விமர்சகர்கள் பிரதானமாகப் பத்திரிகைகளிலிருந்தே சேகரித்துக் கொள்கின்றனர் என்ற உண்மையைக் குறித்து வருந்தும் ஜெலின்ஸ்கி இவ்வாறு எழுது கிறர்: உதாரணமாக, நீப்பர் நதிமீது நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையத்தை நேர்முகமா கக் கண்டு விஷயஞானம் பெறாமல், கிளாத்கோவின் எரிபொருள் என்ற நூலைத் திறம்பட அலசி ஆராய்வது சாத்தியமா? மொழியியல் சம்பந்தப்பட்ட பல யோசனை களை கிளாத்கோவுக்கு வழங்குவது மிகவும் சுலபம். ஆயினும், கலா பூர்வமான கற்பனை வடிவத்தை எதார்த்தத்தோடு

'219

219