பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் என்று நான் நினைக்கிறேன். இதை ஒப்புக் கொள்கிறீர்கள் இல்லையா? நமது மக்களின் அழிக்க முடியாத ஜீவசக்தியைப்பற்றிக் கூறிய அவர் என்னிடம் பின்வரும் செய்தியைக் கூறினார்:

  • 'ஒரு முறை நான் உங்கள் பிரதேசத்துக்கு வந்திருந்த

பொழுது-அதுவும் இருபதாம் ஆண்டுகளில் தான்---நான் போகிற வழியில் ஒரு தேனீ வளர்ப்புத் தோட்டத்தில் இறங்கினேன். உள்நாட்டுப் போர் அப்போதுதான் முடிந்திருந்தது; அந்தத் தேனீ வளர்ப்புப் பண்ணை நாசமாக்கப்பட்டிருந்தது; அதற்குக் காரணம் வெள்ளைப் படையினருக்கும் சரி, நமது சொந்த மக்களுக்கும் சரி, இனிப்பு என்றால் மிகவும் பிடித்தமாக இருந்திருக்க வேண்டும் .... அந்தத் தேனீ வளர்ப்புப் பண்ணையின் உரிமையாளரான அந்தக் குஷியான கிழவர் என்னைச் சந்திப்பதற்காக வந்தார். 'என்ன, வாழ்க்கையெல்லாம் எப்படி இருக்கிறது?' என்று நான் அவரிடம் கேட்டேன். ' அருமையாக இருக்கிறது, மிக்கேல், இவானோவிச்!' என்று கூறினார் அவர். அதில் அத்தனை அருமையென்று கூறுவதற்கு என்ன இருந்தது? அவர் மட்டும் போரினால் நாசமடையவில்லையா? இதனை நான் அவரிடம் கேட்டதும், அ வர் இவ்வாறு பதில் கூறினார்: 'அது எனக்கு நாசம் விளைவிக்கத்தான் செய்தது; என்றாலும் முழுமை யாக அல்ல. எனது நாற்பது தேனீக் கூடுகளில் ஒன்று தப்பிப் பிழைத்து விட்டது. இதற்குக் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அந்தத் தேனீக் கூட்டில் உள்ள தேனீக்கள் நல்ல வலுவான வை. எனவே எனது அருமை விருந்தினருக்கு இப்போதே கூட நான் கொஞ்சம் தேனை வழங்கி உபசரிக்க முடியும், மூன்றாண்டுகளுக்குப் பின்னால் திரும்பவும் இங்கு வாருங்கள்; உங்களால் இந்தத் தோட்டத்தை அடையாளமே கண்டு கொள்ள முடியாது!' ' விடைபெறும் போது நான் எனது' நாவலின் முதல் பாகத்தை எப்போது முடிக்கக் கூடும் என்று எண்ணுகிறேன் என்பதைப் பற்றி மிக்கேல் இவானோவிச் என்னிடம் கேட்டார்; நான் உத்தேசமான தேதியை அவரிடம் சொன்னேன்."

  • ' அப்படியென்றால், அதனைப் படி ப் ப த ற் கு நான்

உயிரோடிருப்பேன்" என்றார் அவர்: என்றாலும், நீங்கள் அவசரப்பட்டு எழுத வேண்டாம்; மேலும் வாசகர்களான நாங்கள் எதை விரும்புகிறோம் என்பதையும் ரொம்பவும் கண்டு கொள்ளாதீர்கள். ஓர் எழுத்தாளரின் புத்தகம் சீக்கிரமே வெ ளிவர வேண்டும் என்று அவரை வற்புறுத்துவது - எங்கள்

வேலை; ஆனால் நீங்கள் எந்த மக்களுக்காக எழுதுகிறீர்களோ,

257