பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத் எழுத்தாளர்களின் இரண்டாவது அகில-யூனியன் காங்கிரசில் ஆற்றிய உரை பாய்ந்தோடும் ஆறுகள் மலிந்த மலை நாட்டில் பிறந்த மிகவும் தொன்மையான பழமொழி ஒன்று இவ்வாறு கூறு கிறது: ஆழமில்லாத ஆறுகள்தான் அதிகக் சத்தம் போடும். விவாதங்கள் கடுமையாகவும், பேச்சுக்கள் சவால் விடுவ தாகவும் இருந்த பிராந்திய மற்றும் வட்டார எழுத்தாளர் களது கூட்டங்களின் ஆரவாரமும் பரபரப்பும் முடிந்து விட்டன, குடியரசு மட்டத்தில் நடந்த கூட்டங்கள் மிகவும் கட்டுப் பாட்டுடன் நடந்தன. இப்போது நடைபெறும் நமது இந்த அகில-யூனியன் காங்கிரசை, ஏராளமான பெரிய, சிறிய உப நதிகளையெல்லாம் தன்னுட் கிரகித்துக் கொண்டு, உண்மை யிலேயே கம்பீரத்தோடு-எனது கருத்தின்படி, கள்ளத்தன மான அமைதியோடு-செல்கின்ற ஒரு முகாந்திக்கு ஒப்பிடலாம். பேச்சாளர்களின் முகங்கள் நிர்விசாரமாக உள்ளன; அறிக்கைகள் முற்றிலும் சம்பிரதாய பூர்வமாக உள்ளன; நமது எழுத்தாளர்கள் மிகப் பெரும்பாலோரின் பேச்சுக்கள் கவனத்தோடு அளந்து பேசுபவையாக உள்ளன ; வாதப் பிரதிவாதங்களில் ஆண்களைக் காட்டிலும், பொதுவாக மிகவும் ஆத்திரமடைந்து பேசக் கூடிய நமது பெண் எழுத்தாளர்களும் பெண் கவிஞர்களுக்கும் கூட-ஒரு சில மிகவும் அரிதான விதி விலக்குகளைத் தவிர-பெரும்பாலும் வாய்மூடி மௌனியாகவே இருக்கின்றனர். சண்டை பிடிப்பதில் கெட்டியான நமது அருமைப் பெண்மணிகள் தமது வாய்ச் சொற்களின் ஆற்றலை யெல்லாம் பூர்வாங்கக் கூட்டங்களிலேயே செலவழித்துத் தீர்த்து விட்டு, இப்போது பேசுவதற்கு எதுவும் இல்லாது போய் விட்ட உணர்வைப் பெற்றிருக்கிறார்களா? அல்லது காங்கிரசின், முடிவு வாக்கில் ஒரு புதிய வார்த்தைத் தாக்குதலைத் தொடுப் பதற்காகத் தமது சக்தியைப் பாதுகாத்து வருகிறார் களா? தெரியவில்லை, நமது பெண் களை,-அவர்கள் எழுத்தாளர்களாக இருந்தாலும் கூட-நம்மால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. அவர்கள் அடுத்தாற்போல் என்ன செய்யக் கூடும் என்று சொல்லவே முடியாது. குறைந்த பட்சம் என்னால் அதை என்றுமே சொல்ல முடியாது. இது காங்கிரசின் ஏழாவது நாள்; என்றாலும் இன்னும் சூழ்நிலை மாறாமலே இருந்து வருகிறது. வாலெந்தின் ஓவெச்கின் னின் பேச்சு ஒன்று மட்டும்தான் ஏதோ சிறிய,

265

265