பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் ஒரு ரஷ்யனாக இருந்தாலும், எனக்கும் அதே வெப்ப நிலை ஏற்பட்டு விடுகிறது. நீங்கள் ஒரு வாசகர்: நான் ஒரு எழுத்தாளன்; நீங்கள் என்னை எவ்வளவு பேரார்வத்தோடு நேசிக்கிறீர்கள், உங்களது உணர்ச்சிகளை நான் எவ்வளவு பேராவலோடு திரும்பப் பிரதிபலிக்கிறேன்" என்.தை நாம் இருவரும் கண் காணும் காட்சியாகப் புலப்படுத்திக் காட்டி விட்டோம். என்றாலும், தமது வாசகர்கள் தம்பால் காட்டும் பாசத்தைத் திரும்பப் பிரதிபலித்துக் காட்டுவதில், எழுத் தாளர்கள் பின்தங்கியே நிற்கிறார்கள் என்று நீங்கள் இன்னும் சொல்லக்கூடும். ஒரு புல்டோஸரே வந்து எங்களைப் பிரிக்கக் கூடிய காலம் வரும் வரையில், நாங்கள் பின் தங்கியே நிற்கிறோம் என்பது உண்மைதான்! நல்லது, போகட்டும் ! தோழர் கஃபுரோல், இப்போது நாம் இருவருமே நிரபராதிகள் என்றே நான் நம்புகிறேன். இல்லையா? அப்படியானால் நல்லது. - அண்மைக் காலத்தில் எந்தப் புத்தகங்களுமே வரவில்லை; "பரந்த வாசகப் பெருமக்களின் இதயங்களையும் மனத்தையும் கவர்ந்து 'ஈர்க்கக் கூடிய புத்தகங்களைத்தான் நான் குறிப்பிடு கிறேன். இதற்கு யாரைக் குற்றம் கூறுவது? முதலாவதாக எழுத்தாளர்களைத்தான் என்பது உண்மைதான்; என்றாலும் கலாசாரப் பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட கட்சி ஸ்தாபனங்களும், வாசகர்களும் கூட்டத்தான், இந்தக் குற்றத்தில் பங்கு பெறு கின்றனர். வாசகர்கள் ஓர் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டு நிற்கக் கூடாது; இலக்கியத்தின் இன்றைய நிலைக்கு அவர்களும் ஓரளவுக்குப் பொறுப்பான வர்களே; ஏனெனில் எல்லோருக்கும் தெரிந்துள்ளபடி, இலக்கியம் என்பது எழுத்தாளர்களுக்கே உரியதான ஒரு தனிப்பட்ட தொழில் மட்டும் அல்ல; அது சகல மக்களின் அக்கறைக்கும், பிற எல்லாவற்றுக்கும் மேலாக கட்சியின் அக்கறைக்கும் உரிய விஷயமாகும். இலக்கியப் போராட்டத்தின் பல்வேறு கட்டங்களில் சித்தாந்தத் தவறுகள் இழைக்கப்பட்டபோது, கட்சிதான் L.Jல முறை எழுத்தாளர்களது யூனியனை நேர்வழியில் செலுத்தி வந்துள்ளது; அதன் வலிமை மிக்க வழிகாட்டும் கரத்தை நாம் எப்போதும் உணர்ந்து வந்துள்ளோம்; இதற்கு நாம் அதற்கு உளமார நன்றி கூறத்தான் வேண்டும், ஆயினும் என்னை உண்மையில் வேதனைக்குள்ளாவது என்ன வென்றால், எண்ணிக்கையில் கணிசமான அளவுக்குப் பல எழுத் தாளர்கள் நெடுங்காலமாக வாழ்க்கையிலிருந்து தனிமைப்பட்டு வாழ்ந்து வந்துள்ளதோடு, இலக்கியத்துக்கும் எவ்விதப் பங்கும்

ஆற்றாமலும் இருந்து வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை

294