பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்தாபனம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையிலிருந்து, நிர்வாக ஸ்தாபனம் என்ற நிலைக்குப் படிப்படியாக மாறிக் கொண் டிருந்தது; மேலும், செயற் குழுவும் வசனம், கவிதை, நாடகம், விமர்சனம் ஆகியவற்றுக்கான பிரிவுகளும், தமது கூட்டங்களை முறையாக நடத்தி வந்த போதிலும், தொழில் நுட்ப ஊழியர்கள் முழுநேரமும் பணியாற்றிய போதிலும், செய்தி கொண்டு செல்வோர் அங்கும் இங்கும் அவசரமாக அலைந்து திரிந்தபோதிலும்-புத்த கங்கள் மட்டும் எதுவுமே வெளிவர வில்லை, நமது நாடு போன்ற நாட்டுக்கு, ஆண்டொன்றில் ஒரு சில நல்ல புத்தகங்களே வெளிவருவது என்பது பரிதாபத்துக்குரிய விதத்தில் மிக மிக அற்பமானது. எனக்கு மிகவும் விசித்திரமாகத் தோன்றும் பதப் பிரயோகங்கள், எழுத்தாளர்களது சொல் வழக்கில் புகுந்து கொண்டுள்ளன. உதாரணமாக, “'இன்னார் ஒரு படைப்பாக்க பயணத்தை மேற்கொண்டு சென்றிருக்கிறார்" என்பதைச் சொல்லலாம், ஓர் எழுத்தாளரின் வாழ்க்கை முழுவதுமே ஒரு படைப்பாக்க யாத்திரையாகவே இருந்தாக வேண்டிய நிலையில், அவர் ஏன் ஒரு ** படைப்பாக்கப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்? அல்லது இன்னொரு நல்ல உதாரணத்தையும் கூறலாம்: * எழுத்தாளர் யூனியன் செயலாளருக்கு ஓராண்டுக் காலத்துக்குப் படைப்பாக்க விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதே அது. தமது ' 'படைப்பாக்க விடுமுறை' ' க்கு முன்னால், அந்த எழுத்தாளர் எதையுமே எழுதவில்லை, மாறாக அவர் வேறு காரியங்களில் ஈடுபட்டிருந்தார் என் 3 உண்மையைப் பட்ட வர்த்தனமாக ஒப்புக்கொள்வதைத் தவிர, இதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நல்லது. எனவே ஒன்றிலிருந்து இன்னொன்று விளைந்தது, ஃபதயேல் போதுமான அளவுக்குப் டேபராசை பிடித்த பொதுச் செயலாளராக மாறி விட்டார்; கூட்டுத் தலைமைக் கோட்பாட்டை ஒத்துக் கொண்டுபோக அவர் மறுத்தார். ஏனைய செயலா ளர்களுக்கும் அவரோடு சேர்ந்து வேலை பார்ப்பது அசாத்தியமாயிற்று. இந்த விவகாரம் பாதித்து ஆண்டுகளாக இழுத்தடித்தது. கூட்டு முயற்சியின் மூலம் நாம், ஃபதயேவிடமிருந்து அவரது படைப்பாக்க வாழ்வின் பதினைந்து சிறந்த ஆண்டுகளை பறித்தெடுத்துக் கொண்டோம்; இதன் விளைவாக நமக்கு இப்போது ஒரு பொதுச் செயலாளரும் இல்லை; அல்லது ஓர் எழுத்தாளரும் இல்லை, எழுத்துத் துறையில் அதிகார வேட்கை எந்தப் பயனும் அளிக்காது. எழுத்தாளர் யூனியன் ஒரு ராணுவப் படைப் பிரிவு அல்ல; அது ஒரு தண்டப் படையும் அல்ல; எனவே, தோழர் ஃபதயேவ் அ வர்களே,

எழுத்தாளர்களில் எவரும் உங்கள் முன் நின்று சலாம் போட்டுக்

296