பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' பரிசீலனைக்கு ரிய ஆண்டுகளில் கட்சியும் மக்களும் சாதித்துள்ள - வற்றைத் தொகுத்துக் கூறும் புள்ளி விவரங்களைத் தெரிந்து கொள்ளும்போது, இந்த அசுர முயற்சியின் விளை safகளை நாம். உண்மையிலேயே காண்கிறோம்; தமது வருங்காலத்தின் பெயரால் மக்கள் உருவாக்கி வருவ தள் பெருமை எத்தகையது என்பதை உண்மையிலேயே கண்டுணர்கிறோம். .. ' .. இந்தக் கவிதாபூர்வமான முன்னுரைக்குப் பிறகு நான் சட்டென்று வசன நடைக்கு மாறினால், தொழில்துறை, விஞ்ஞானம் அல்லது கல்வி ஆகிய ஏதாவதொரு துறையில் தாம் பெற்றுள்ள வெற்றிகளைக் குறித்து, இந்த உயர்ந்த மேடையி லிருந்து காங்கிரசுக்கு எடுத்துக் கூறக் கூடிய 'நபர்களைக் "கண்டு, நான் பொறாமைப் படுகிறேன் என் பதை நான் சகல நேர்மை யுணர்ச்சியோடும் அறிவிக்கத்தான் வேண்டும். நாம் இங்கு சோவியத் இலக்கியத்தின் ஒரு பிரதிநிதியாக நின்று பேசு கிறேன்; நாங்கள் பெற்றுள்ள வெற்றிகள், நாங்களும் எங்களது வாசகர் களான. நீங் க ளும் எத்தனை - பெரிய ைவ யாக இருக்க வேண்டு மென்று. விரும்புகிறோமோ, அத்தனை பெரியவையாக இருக்கவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும், துலாவிலுள்ள எழுத்தாளர் ஸ்பானத்தின் செயலாளர் கூறியதாக ஒரு 'ஜோக்' உண்டு; அங்கு அவர்களது காரியங்கள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்று அவரிடம் கேட்ட போது, அவர் மிகவும் குதூகலத்தோடு இவ்வாறு பதிலளித் தாராம்: நாங்கள் அருமையாகச் செயல்பட்டு வருகிறோம்! முற்காலத்தில் துவா குபெர்னியாவில் ஒரே ஒரு எழுத்தாளர். தான்-லெவ் டால்ஸ்டாய் மட்டும் தான் இருந்தார்; இன்றே எழுத்தாளர் யூனி யஈ து துலா : பிராந்தியக் கிளையில் இருபத்தி மூன்று உறுப்பினர்கள் உள்ளனர் என்று நாங்கள் பெருமைப் பட்டுக்கொள்ள முடியும், . . - அவரைப் போல் நன்னம் பிக்கை கொண்டவனாக நான் இல்லை. நமது எண்ணிக்கைகள் அதிகரித்துக் கொண்டே - போகின்றன என்பது உண்மை தான் என்றாலும் நமது கூட்டுறவுத் துறையாளர்கள் கூறுவதுபோல், உற்பத்தியான பொருள் . மட்டும் விரும்பிய தரங்களை எப்போதுமே பூர்த்தி செய்து விடுவதாய் இருக்கவில்லை.” கடந்த சில ஆண்டுகளில் வசன நூல்களும் கவிதை நூல். களுமாக, சில நல்ல புத்தகங்கள் வெளிக்கொணரப்பட்டன என்பது உண்மையே; எனினும் அவை போதுமானதே அல்ல, இது லெனின் பரிசுக்காக அனுப்பப்பட்டிருந்த புத்தகங்களின்