பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சார்டெல்' வகை மீன்களைப் பிடித்து வரலாம் என்று அடித்துக் கூறுகிறார். ஆனால் அவர் குறிப்பிடாதது என்னவென்றால், சார்டெல் 6வ கை மீன்களோடு மதிப்புமிக்க ஏராளமானோ சிறுமீன் வகைகளும் சேர்ந்தே பிடிக்கப்படும் என்ற விஷயம்தான். . நேற்று எனது நோக்கம் தோழர் இஷ்காவுக்கு முகத்தி லடித்தாற்போல் நேரடியாகப் பதில் கொடுப்பதாகத்தான் இருந்தது என்ற ரகசியத்தை இப்போது கூறிக் கொள்கிறேன்; ஆனால் மாலையில் எனது மிகப் பழைய தோழர்களான சில போர்முனை நண்பர்களை நான் சந்தித்தேன்; நான் தயாரித்து வைத்திருந்த உரையை அவர்களிடம் காட்டுமாறு ஏதோ ஒரு சைத்தான் உணர்ச்சி என்னைத் தூண்டி விட்டு விட்டது. அவர்கள் எனது முரட்டுத்தனத்துக்காக என்னைக் குற்றம் சாட்டினர்; தோழர் இஷ்கோவ் மோசமான நபரும் அல்ல, மோசமான உழைப்பாளியும் அல்ல என்றும் என்னிடம் கூறினர். அத்துடன் எனது உரையையும் நான் காரசாரமின்றிச் சாதுவாக்கிவிட வேண்டும் என்று என்னை வற்புறுத்தி, அதுபற்றி என்னை உறுதி மொழியும் கூற 50வத்துவிட்டனர், ஒரு வர து போர்முனை நண்பர்களுக்காக யார்தான் எதுதான் செய்யமாட்டார்கள்! நான் அந்த ஸ்டர் ஜன் மீனை-அதாவது அமைச்சரைக்--கண்டித்துப் பேச விரும்பினேன். மேலும், சார்டெல் மீன் வகையை- அதாவது ராஸ்தாவ் மீன் பிடி வாரியத்தை அல்லது வேறு மீன் பிடி வாரியத்தைக் கண்டித்துப் பேசுவதில்தான் என்ன பயன் ; நல்லது, உறுதிமொழி கொடுத்து விட்டால், அது உறுதிமொழியே தான், எனவே நான் இதற்குமேல் எதுவும் சொல்ல மாட்டேன், அதனால் நான் தோழர் இஷ்கோவுக்குக் கூறும் வாழ்த்துரை யெல்லாம் இதுதான்: " அவர் வாழட்டும்; வாழ்ந்து சார்டெல் வகை மீன்களை மேய்ந்து கொண்டிருக்கட்டும்! நமது மீன் வளத் துறை நிபுணர்கள் ஆற்றியுள்ள பங்கும் மிகவும் அற்பமானது, நமது தேசப் பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாதது என்பதையும் நான் கூறியாக வேண்டும். ஜப்பான், ருமேனியா போன்ற நாடுகளி லும் பிற இடங்களிலும், ஒரு ஹெக்டேர் நீர் நிலைப் பரப்பில் பிடிக்கப்படும் மீன்களின் அளவு, நமது நாட்டில் பிடிக்கப் படுவதைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக உள்ளது. இந்த ஒப்பு நோக்கு நமக்கு ஒன்றும் சாதகமாக இல்லை என்பதை நீங்களே காணலாம்; எனவே பொருளாதாரத்தின் இந்தக் குறிப் பிட்ட துறையில் சிந்தனையைச் செலுத்த வேண்டியவர்கள், இது விஷயமா கவும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது பற்றி அவர்கள் விரைவாக சிந்தித்தாக வேண்டும்; ஏனெனில் நமது நதிகள் 358