பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாக்சிம் கார்க்கியைப் பற்றிய உரையிலிருந்து ...19னித குலத்தின் ஒளிமயமான வருங்காலத்துக்காகப் போராடி வந்த மக்களை, கார்க்கி உணர்ச்சிப் பெருக்கோடு நேசித்தார்; அவர் தமது கோபாவேசமான சுபாவத்தின் புலம் அனைத்தையும் கொண்டு, சுரண்டல்காரர்களையும், வர்த்தகர் களையும், மற்றும் நாகரிகம் பரவாத ரஷ்ய நாட்டுப்புறத்தின் அமைதியான சூழலிலே தூங்கி வழிந்து கொண்டிருந்த குட்டி பூர்ஷ்வாக்களையும் வெறுத்தார்... மிகவும் பல்வகைப்பட்ட விஷயங்களைப்பற்றி கார்க்கிக் கிருந்த மிகப் பெரும் விஷயஞான வளத்தையும், அவரது களைப்பே மீறியாத விடாமுயற்சியையும், தமக்குத் தாமே அவர் ஏற்றுக் கொண்ட கடுமையான கடமைகளையும் கண்டு நான் எப்போதும் வியந்து போயிருக்கிறேன், அவரது நூல் கள் ஜாரிஸ்டு அரசாங்கத்தை எதிர்த்துப் போராட, ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்துக்குக் கற்றுக் கொடுத்த னே நான் வெளி நாடுகளுக்குச் சென்றிருந்த காலத்தில், மேலை நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தினர் கார்க்கியை எவ்வாறு நன்கறிந் துள்ளனர், அவரை எவ்வாறு விரும்பி வருகின்றனர் என்பதை நேரில் கண்டேன்; அவரது அமரத்துவம் வாய்ந்த படைப்புக் களிலிருந்து அவர்கள் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட்டக் கற்று வருகின் ற னர். வளைந்து கொடுக்காத மனோதிடமும் அரிய திறமையும் படைத்த மனிதரான கார்க்கி இலக்கிய உலகில் பிரவேசிப் பதற்காக ஒரு - கடுமையான போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது. ஜாரிஸ்டுக் காலத்தில் வெகு ஜனங்களின் மத்தியிலிருந்து தோன்றிய திறமைசாலிகள் முளையிலேயே கிள்ளி யெறியப்பட்டு வந்தனர்; ஏனெனில் அறிவுச் செல்வங்களை நாடி அடையும் மார்க்கத்தில் போராடி முன்னேறிச் செல்வதற்கான பலம் அவர்களுக்கு இல்லை. பழைய ஆட்சி மக்களிடமிருந்து தோன்றும் திறமையின் வெளிப்பாடுகளையெல்லாம் தகர்த்து வ ந்தது, சோவியத் யூனியனில், இளம் மக்கள் கலாசார சிகரங்களை எட்டிப் பிடிப்பதற்கு, அதற்கு முன் எங்கும் எந்தக் காலத்திலும் தெரியவந்திருந்த எதனோடும் ஒப்பிடுவதற்கே இயலாத நிலைமைகள் உருவாக்கப்பட்டுள்ளன... 1935 331