பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது வலிமை மிக்க கட்சி எதனை வெற்றி கொண்டுள்ளது, எதனைச் சாதித்துள்ளது என்பதையும், அது இன்னும் அதிகமாக எவ்வளவு சாதிக்க வேண்டியுள்ளது என்பதையும் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கும் போது, உண்மையில் நமது தொண்டையில் ஏதோ ஒன்று எழுந்து அடைக்கத்தான் செய்கிறது; ஏனெனில் உண்மையிலேயே அது அத்தனை அற்புதமாக உள்ளது! மேலும், உண்மையைச் சொல்லப் புகுந்தால் , நாமெல்லாம் திறமை மிக்க நபர்கள், இல்லையா? நாம் வ விதை. மிக்க பிறவிகள்.. இல்லையா? ஒவ்வோர் அம்சத்திலும் , வலிமை மிக்கவர்கள். இல்லையா?' என்று உந்தியெழும்பும், பாராட்டுணர் வோடும், வாஞ்சை மிக்க செளஜன்யத்தோடும் நமக்கு நாயே கூறிக் கொள்ளும் அளவுக்கு, நாம் சமயங்களில் கட்சியைப் பற்றியும் சோவியத் மக்களைப் பற்றியும், அத்தனை பெருமையடித் துக் கொள்ளும் உணர்வையும் பெறுகிறோம். கம்யூனிசத்தை நோக்கிச் செங்குத்தாக டேலேறிச் செல்லு மாறு சரித்திரமே நமக்கு விதித்திருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம், இவ்வாறு ஏறிச் செல்வது சமயங்களில் மிகவும் கடினமாக இருக்கும், இதனால் ஏற்படும் சிரமத்தால் நமது வாயெல்லாம் வற்றியுலர்ந்து விடும் என்பதையும் நாம் நன்கு அறிவோம். என்றாலும் நாம் சிகரத்தை எட்டிப் பிடித்த பிறகோ', இது வரையில் கண்டறியாத புதிய அடி. வானங்கள் நம் முன்னே புலப்படும், இந்த உயரத்தை நாம் ஏறி முடித்த பின்ன ரோ. நமது உடம்பு களைத்துப் போயிருந்தாலும், நமது உணர்வு என்றுமே களைத்துப் போயிருக்காது; மேலும், அந்த உயரத்தில் ஓர் இதமளிக்கும், ஜீவனை வழங்கும் சுனை யூற் று நமது தாகத்தையெல்லாம் தணித்துவிடும்.. இந்தச் சிற மாயமான மலையேற்றமானது அதன் உலக முக்கியத்துவத்தில், நாம் எந்தக் குறிக்கோளை நோக்கி முன்னேறிச் செல்கிறோமோ அந்தக் குறிக்கோளைப் போலவே, பெரியதும் கெளரவம் மிக்கதுமான முயற்சியாக விளங்கும். ஆயினும், மாபெரும் கப்பல்கள் மகா சமுத்திரங் களை நீந்திக் கடந்தாக வேண்டியிருப்பதுபோல், மாபெரும் மக்களும் ஒரு மாபெரும் மார்க்கத்தையும் கடந்தே ஆகவேண்டும், மேலும், கம்யூனிஸ்டுகளின் அஞ்சா நெஞ்சமும் விவேகமும் மிக்க கட்சியினால் வழி நடத்தப்படும் நமது துணிவாற்றல் மிக்க மக்களை, எந்தப் பின்னடைவுகளோ அல்லது சிரமங்களோ அச்சுறுத்த முடியாது. எதிரிகளின் சூழ்ச்சிகளையெல்லாம் மீறி, அவநம்பிக்கை கொண்டவர்களின் அழுகுணி ' ஒப்பாரிகளுக் கெல்லாம் மாறாக, நாம் கம்யூனிசத்தை அடைந்தே - தீருவோம்., நாம் அதனை அடைந்தே தீருவோம்; ஏனெனில், உழைப்புச்,