பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுள்ளன ; என்றாலும் மனவேதனை தரத்தக்க விதத்தில் அலை மிகமிகக் குறைவாகவே , உள்ளன. நாம் மேலும் அதிகமாகப் படைத்தளித்திருக்க முடியும். இந்த எண்ணமானது பிரதிநிதித் தோழர்களும் - வாசகர்களுமான உங்களுக்கு ' மன வருத்தம் தருவதைக் காட்டிலும், எங்களுக்கே மிகவும் மனவருத்தம் தருவதாக உள்ளது. . நமது இலக்கியம் ஏன் சரிசமமாகக் கைகோர்த்து முன்னேறி வரவில்லை என்பதற்கும், ஏன் சுமாரான புத்தகங்கள் தோன்றி வருகின்றன என்பதற்கு A. மான பிரதான மான காரணங்களில் ஒன்று; எதார்த்த வாழ்க்கையிலிருந்து எழுத்தாளர்கள் அன்னிய மாகிப் போயிருப்பதும்-இது எழுத்தாளர்கள் வாழும் சூழ்நிலையில் நிலை நாட்டப்பட்டுள்ள ஒரு காட்சியுண்மையாகும்-வெகு வேக மாக இயங்கிச் செல்லும் நமது வாழ்க்கையோடும் அதன் : தொடர்ச்சியாக மாறிவரும் தன்மைகளோடும் அவர்கள் கொண்டுள்ள மேம்போக்கான பரிச்சயமுமேயாகும் என்றே நான் இன்னும் கருதுகிறேன்....... - . 'எனது அபிப்பிராயத்தின்படி, கூட்டுப் பண்ணை அல்லது ' அரசாங்கப் பண்னையைச் சேர்ந்த மக்களைப் பற்றி எழுதும் ஒரு நூலாசிரியர், குறைந்த பட்சம் ஒரு விவசாய விஞ்ஞானியின் அளவிலாவது, விவசாயத் துறையைப் பற்றி ஏதோ கொஞ்சம் விஷய ஞானத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஓர் இரும்பு- உருக்குத் தொழிற்சாலையைப் புற்றி'. எழுதுபவர்கள், அதன் தொழிலாளர்களையும், இஞ்சினீயர்களையும், தொழில் நுட்ப நிபுணர்களையும் பற்றி அறிந்திருக்க வேண்டும்; மிகவும் தகுதி மிக்க தொழிலாளி ஒருவர் உற்பத்தியைப் பற்றி நல்ல விஷIL: ஞானத்தைத் தெரிந்து கொண்டிருப்பது போல், அவர்களும் அந்த அளவுக்கு முற்றிலும் விஷயஞானம் பெற்றிருக்க வேண்டும் . நமது ராணுவத்தைப் பற்றி எழுதுவதற்காகத் தம் பேனாவை அர்ப்பணித்துள்ள எழுத்தாளரும், ராணுவ விஷயம் 'களில் குப்ரினும், லெவ் டால்ஸ்டாயும் எவ்வாறு நிபுணர்களாக இருந்தார்களோ, அதற்கு எவ்விதத்திலும் குறையாத அளவுக்கு அந்த விஷயங்களில் நிச்சயமாக அவர் ஒரு நிபுணராக இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால், அவர் வெறுமனே கதையளந்து கொண்டுதான் இருப்பார்; அதனால் அவரது படைப்பும் மலிவாலா சரக்காகவே இருந்து விடும். இதுதான் அநேகமாக மிகவும் அடிக் கடி நிகழ்ந்து வருகிறது, இப்போதோ, காதல் கதை எல்லோரும் தாராளமாக எழுதக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. எந்தவிதமான பிரத்தியேக - விஷ4/ ஞானத்தையும் கோராத ஒரு விஷயம் இது ... 411