பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாத்திரங்களின் பல்லாண்டுக் கால வாழ்க்கை களை இனம் காட்டவும் எழுத்தாளருக்கு இடம் கொடுக்கிறது, நமது புகழ் பெற்ற சிறு கதை எழுத்தாளர்கள், இந்த பூமிகப் பெரிய திரைச்சீலை களுக்கு மாறுவதற்கான தருணம் வந்து விட்டது. நமது இலக்கியத்தை மேலும் வளப்படுத்தும் பெரும் கதை இலக்கியப் படைப்புக்களைப் படைப்பதற்கு அவர்களிடம் ஏராளமான திறமையும் சக்தியும் உண்டு. - கார்க்கியின் முன்முயற்சியின் பேரில் நாம் பல்வேறு ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் வரலாறுகளை வெளியிட்டுள்ளோம்; தொடர்ந்து வெளியிட்டும் வருகிறோம். கூட்டுப் பண்ணைகள் அரசாங்கப் பண்ணைகள் ஆகியவற்றின் வரலாறுகளை எழுதுவதில் எழுத்தாளர்கள் ஏற்கெனவே முனைந்து ஈடுபட்டுள்ளனர். இந்தப் புத்தகங்கள் நாவல் களுக்குப் பதிலிகள் ஆகாது. இது தெ ளிவானது. என்றாலும் அவை ஒரு காவிய நாவலுக்கான அடிப்படையாக விளங்க முடியும். மேலும், ஒரு விஷய மூலாதாரம் என்ற முறையில், அவை ஒரு நூலாசிரியருக்கு மதிப் பிடற்கரிய உதவியாகவும் விளங்க முடியும், நமது நோக்கங்களுக்கும் நமது திறமைக ளுக்கும் இடையே ஏற்றத் தாழ்வு ஏதும் இல்லை என்றே நான் கருதுகிறேன். மேலும், என்னதான் இருந்தாலும், நாம் இந்தப் பொன்விழா ஆண்டுக்குப் பிறகு கூட முன்னைப்போல் அரும்பாடுபட்டுத்தான் உழைக்க வேண்டியிருக்கும். சோவியத் இலக்கியம் தனது நாட்டுக்கும் உலகத்துக்கும் பல புதிய, அற்புதமான நாவல்களை வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதனை நனவாக்குவதற்கு நமக்கு எல்லா நிலைமைகளும் திறமைகளும் உள்ளன, நீங்கள் எல்லோரும் உங்கள் தோட்டங்களில் மாபெரும் துணிவுமிக்க காரியங்களையும், உங்களது படைப்பாக்கப் பணி களில் வெற்றியையும் பெற, எனது இதயத்தின் அடியாழத்தி லிருந்து நான் உங்களை வாழ்த்துகிறேன். 1967 இத்தகைய அற்புதமான மக்களோடு வாழ்வதுதான் எத்தனை ஆனந்தமானது ! (கூட்டுப் பண்ணை விவசாயிகளின் மூன்றாவது அகில-யூனியன் . காங்கிரசில் ஆற்றிய உரை) தோழர்களே, கூட்டுப் பண்ணை விவசாயிகளுக்கு மட்டுமே அல்லாமல், நம் அனைவருக்கும், நாடு முழுவதற்கும் மிகப் பெரும் முக்கியத்துவம் 438