பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபாய மண்டலத்தின் வழியே மிகவும் கவனமாக ஓட்டிச் செல்லப்பட்டன; அதே சமயத்தில் ஆபத்தான இடங்களில் எவரும் ரோட்டை விட்டு விலகிப் போய்விட்டாத வாறு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல் வீரர்கள் தமது கழுகுப் பார்வையைப் பாய்ச்சி நாலா பக்கமும் கண்காணித்து வந்தனர். பீரங்கிச் சண்டையின் முழக்கம் அதிகரித்தது ; அளவில் - பெருகி விம்மியது; இப்போது நாங்கள் நமது சோவியத் கனரக பீரங்கிகளின் இடி முழக்கத்தைத் துலாம்பரமாக இனம் கண்டு கொள்ள முடிந்தது; அந்த முழக்கம் எங்கள் காதுகளில் இனிய சங்கீதம்போல் ஒலித்தது. விரைவிலேயே நாங்கள் நமது ரிசெர்வ் படை யூனிட்டுகளில் ஒன்றின் மகிழ்ச்சியில் கலந்து கொண்டோம். அந்தப் போர் வீரர்கள் அப்போதுதான் போரிலிருந்து திரும்பி வந்திருந்தனர்; எனினும் அதற்குள்ளேயே அவர்களில் யாரோ ஒருவர் அக்கார்டியன் வாத்தியத்தில் ஏதோ ஒரு மிருதுவான சிறு கீதத்தை வாசித்துக் கொண்டிருந்தார். நிலவறைக்கு முன்னால் சுமார் இருபது போர் வீரர்கள் வட்டமாகச் சூழ்ந்து நின்று கொண்டு, அந்த வட்டத்தின் நடுவில் பகட்டு நடை நடந்து கொண்டிருந்த ஒரு கட்டுமஸ்தான இளம் போர் வீரனைப் . பார்த்துக் குதூகலித்துச் சிரித்துக் கொண்டிருந்தனர். அவன் கோமாளித்தனமான சோர்வோடு தனது பரந்த தோள்களை உலுப்பித் திருப்பியபோது, அவனது சட்டை அவனது முதுகுக்குக் குறுக்கே விறைத்து நீண்டது; அப்போது காய்ந்துபோன வியர்வையின் வெள்ளை நிறமான கறைகள் அவனது தோள் பட்டைகளின் மீது தெளிவாகத் தெரிந்தன. அவன் தனது பெரிய கரங்களின் உள்ளங்கைகளால், தனது உயர்ந்த பூட்சு களின் கால்களைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே, அலங்கோல் டமாகவும் ஒல்லியாகவும் இருந்த போர்வீரனான தனது நெருங்கிய நண்பனை நோக்கிக் குதூகலத்தோடு இவ்வாறு அழைப்பு விடுத்தான் : 45 போ, வா, முன்னே வா. எதைக் கண்டு பயப்படுகிறாய்? நீ ஒரு ரையஜான் பிரதேசத்து மனிதன்; நான் ஓரெல் பிரதேசத்து மனிதன். எனவே நம்மில் யார் நாட்டியமாடுவதில் கெட்டிக்காரர் என்பதைப் பார்த்து விடுவோம். ஆயினும் அங்கு நிலவிய குறுகிய கால அந்தியொளி இருளாகக் கனத்து மாறி, காட்டின் மீது கவிந்தது; முகாமிலும் அமைதி நிலவத் தொடங்கியது. மறுநாள் பொழுது விடிந்ததும், நாங்கள் தாக்குதலில் ஈடுபட்டிருந்த தளபதி கோஸ்லோவின் யூனிட்டுக்குச் செல்ல விருந்தோம்.

1943

73