பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

121


பத்திரிகைக்கு அவர் கட்டியிருந்த முன் ஜாமீன் பணம் பறிபோயிற்று.

அதுவரை பத்திரிகை வரலாற்றில் முன் ஜாமீன் பணத்தைப் பறிகொடுத்த பத்திரிகை அன்னி பெசண்ட் அம்மையாரின் ‘நியூ இந்தியா’ என்ற இதழும், டி.எஸ். சொக்கலிங்கத்தின் ‘காந்தி’ என்ற ஏடும்தான். இந்த ஈடுகாணம் பறிமுதலை எதிர்த்து சொக்கலிங்கம் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதனால் நீதிமன்றம் அரசு உத்தரவைத் தள்ளுபடிச் செய்து விட்டது. இதற்குக் காரணம் ஆசிரியர் சொக்கலிங்கம் எழுதிய கட்டுரையின் இரண்டொரு சொற்கள் அவருக்குச் சாதமாக அமைந்ததுதான்.

எனவே, கட்டுரை எழுதுவோர் கட்டுரைக்காகப் பயன்படுத்தும் சொற்களைச் சற்று கவனத்துடன் ஆட்சி செய்ய வேண்டும் என்று அப்போது வெளிவந்து கொண்டிருந்த ‘தாருல் இஸ்லாம்’ என்ற பத்திரிகை, இதழாசிரியர்களுக்கு அறிவுரை கூறியதை நாமும் இன்று நினைவில் நிறுத்த வேண்டிய கருத்தாக இருக்கிறது.

1934-ஆம் ஆண்டில் சொக்கலிங்கம் ‘தினமணி’ என்ற நாளேட்டில் ஆசிரியராகப் பணியாற்றி நேரத்தில், அவர் எழுதிய அரசியல் விமர்சனங்கள், ஆணித்தரமானக் கட்டுரைகள், வேகமான தலையங்கங்கள், விளக்கமான குறிப்புகள் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற தமிழ் நடை ஆகியவை; அவருடைய பத்திரிகை ஆசிரியர் திறமைக்குச் சான்றுகளாக அமைந்து, மக்களிடையே நல்ல செல்வாக்கைப் பெற்றுத் தந்தன.

மணலைக் கயிறாகவும் திரிக்கலாம்; வானத்தையும் வில்லாக வளைக்கலாம்;. ஆனால் எழுத்தாளர்களை ஒன்று சேர்ப்பதென்பது அவற்றைவிடக் கடினமான காரியம் என்று 1944-ல் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டில் அன்றே அவர் குறிப்பிட்ட உணர்ச்சிகள் இன்றைக்கும் ஓர் அறிவுரையாக நமக்கு அமைந்துள்ளது.

ஒன்றுபட மறுக்கும் எழுத்தாளர்கள்கூட ஒருமுகமாகப் பாராட்டும் ஒரு பத்திரிகையாளராக, எழுதுகோல் வீரராக