பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

147


திராவிடச் சமுதாயத்தில் பறையன் என்று தன்னை இகழ்ந்தாலும், அவர்கள் இன உரிமைக்காக தனது பத்திரிகையிலே எழுதிப் போராடியதால்தான் - இன்று ஆதி திராவிடப் பழங்குடி மக்கள் சமத்துவம் பெற்று வாழ்கிறார்கள் என்பதை எவரே மறுப்பர்?

‘குத்தூசி

குருசாமி’

இவருடைய ஊர் தஞ்சை மாவட்டத்திலுள்ள குருவிக்கரம்பை. 1906-ல் பிறந்தார். படிப்பு பி.ஏ., உச்சிக்குடுமி, சாம்பல்பட்டை, உருத்திராட்சக் கொட்டை, தேவார பாராயணம், கதாகாலட்சேபம், காந்தி பக்தி, குருசாமியின் தோற்றமும் செயலும் இவைதான்.

இத்தகையவரை, வ.வே.சு. ஐயரின் சேரன்மாதேவி குருகுலச் சாதிப் போராட்டம் சிந்திக்க வைத்தது. எழுத்துத் திறனில் ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் சிறந்தவரானார். இவருடைய இங்லீஷ் புலமையைக் கண்ட தந்தை பெரியார் Revolt என்ற பத்திரிகைக்குத் துணை ஆசிரியராக்கினார். பிறகு ‘விடுதலை’ என்ற திராவிடரியக்க நாளேட்டிற்கு ஆசிரியரானார். ‘குத்தூசி’ என்ற பகுதியில் கட்டுரைகள் பல எழுதி திராவிட இனத்திடம் பெரும் புகழ் பெற்றார்.

அண்ணல் காந்தியடிகளை 1932-ஆம் ஆண்டில் தனது சுயமரியாதைத் தோழர்களுடன் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அடிகளும் - குருசாமியும் கடுமையாகத் தர்க்கம் செய்து கொண்டார்கள். எதைப் பற்றி?

“காந்தியடிகள் தனது வாயாலேயே, ‘நானும் பார்ப்பனர் கொடுமைக்கு ஆளாகியதுண்டு. இன்னும் ஆளாகி வருகிறேன்” என்று சொல்ல வைத்தவர் குத்தூசி குருசாமி என்றால், அவரது வாதத் திறமை எத்தன்மைத்ததாக இருந்திருக்க வேண்டும்? ஒரு பத்திரிகை ஆசிரியனுக்கு இந்தத் தருக்க வாதத் திறமை தேவையல்லவா?