பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



11


பத்திரிகை நடத்துவோர்க்குரிய
பொதுவான அடிப்படைச் சட்டங்கள்

1. மான இழப்பு
வழக்குச் சட்டம்

வேளாண்மை செய்யும் உழவனுக்கு எப்படி ஏர் உழும் கருவியும், மாடும் தேவையோ, அதைப்போல பத்திரிகை நடத்த விரும்புபவர்களுக்கு மனம்போனபடி எழுதும் உணர்சிகளுக்கு அடிமையாகாத எச்சரிக்கையும், பொறுப்பான கவனமும், கட்டுப்பாடும், கண்ணியத்தோடு சிந்தனைகளை ஓடவிடும் கடமையும் தேவையாகும். தவறினால் ஒருவரின் பெருமையைச் சிறுமைப் படுத்தும் மான இழப்புக்கு; எழுத்தும், கருத்தும் காரணங்களாகிவிடும். அதனால், குற்றவியல் சட்டத்திற் கேற்ப Criminal Law வழக்கையும், சமுதாயவியல் சட்டத்தின்படி Civil Law நடவடிக்கைகளையும் சந்திக்கவேண்டிய நிலைகள் உண்டாகும்.

தனிப்பட்ட ஒருவரைப் பத்திரிகையாளர் ஒருவர் இழிவுபடுத்தி அவதூறாக (Scandal) எழுதினார் என்ற குற்றத்திற்கும், எழுத்து வாயிலாக அவதூறானக் கருத்தைப் பத்திரிகையில் வெளியிட்டார் Libel என்ற குற்றத்திற்கும் அந்த இதழாளர் ஆளாக நேரிடலாம். இந்தியக் குற்றவியல் PC