பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

பத்திரிகை வளர்ச்சிகளை அழிக்கும் அடக்குமுறைச் சட்டங்கள்!


குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மாநில ஆளுநர், மத்திய, மாநில மந்திரிகள் ஆகியவர்கள் அவமதிப்புக் குற்றத்திற்கு ஆளானதாகக் கருதினால், அவர்கள் சார்பில் அரசு வழக்குரைஞர்கள் வழக்கைத் தொடுக்கலாம்.

அவமதிப்பு வழக்கைத் தொடுப்பவர், யார் அவமதிப்பு செய்தாரோ அவர் மீது மட்டுமின்றி, அந்தச் செய்தியை வெளியிட்ட பத்திரிகையின் பதிப்பாளர், அச்சகத்தார், அதனை எழுதிய ஆசிரியர் ஆகிய அனைவர்மீதும் அவமதிப்பு வழக்கைத் தொடரலாம். வழக்கு மன்றத்தில் அது உண்மையானதுதான் என்று நிரூபிக்கப்பட்டால் அனைவருக்கும் தண்டனை உண்டு.

தண்டனை
வகைகள்

தண்டனை பெற்ற அவமதிப்பாளர்களுக்கு குற்றவியல் சட்டத்தின் 500-வது பிரிவின்படி, 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ சேர்ந்து கொடுக்கப்படலாம்.

சட்டக் குழு (The Law Commission) மேற்கண்ட இரண்டு தண்டனைகளுடன், நீதிமன்றத் தீர்ப்பைப் பத்திரிகைகளில் வெளியிடவும், வழக்கு மன்றத்தில் வழக்குத் தொடுத்தோரின் செலவுகளையும் ஏற்றாக வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளது.

எனவே, மான இழப்பு வழக்குத் தொடுத்தவர் பொது சட்டத்தின்படி இழப்பீடு தொகையைப் பெறலாம். குற்றவியல் சட்டப்படி அவமதிப்பு செய்தவர் தண்டனை பெறுவார்.