பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

245



4. அலுவலக இரகசியங்களை
வெளியிடும் குற்றச் சட்டம்

நாட்டில் நடைபெறும் நடப்புக்களை எல்லாம் மக்களாட்சியில் வாழும் மக்கள் தெரிந்துவைத்துக் கொள்வது நல்லது. அதற்கான எல்லா விவரங்களையும் அரசு திரட்டி வைத்துள்ளது. அவற்றுள் பலவற்றை நிர்வாகம் செயல்படுத்துவதையும் பார்க்கின்றோம். இந்த விவரங்களைச் சேகரிக்கும் வேலையைப் பத்திரிகைகளும் செய்கின்றன.

நாட்டின் பாதுகாப்பு, தனிப்பட்ட சில மனிதர்களைப் பற்றிய இரகசியங்கள், வெளிநாட்டின் தொடர்புகள், ஒரு வழக்குப் பற்றிய புலனாய்வுக் கருத்துக்கள், நாட்டை ஆளும் அமைச்சர் அவையின் முடிவுகள் ஆகியவற்றினுடைய எல்லா இரகசியங்களையும் வெளியிடாமல், எவரும் அறியாமல், நிர்வாகத் திறமைகளின் சார்பாகப் பாதுகாத்து வைப்பதை, அரசுக்குத் தெரியாமல் அந்தப் பத்திரிகைகளில் அம்பலப் படுத்துவது சட்டப்படிக் குற்றமாகும்.

ஒரு விவரத்தை ஒற்றாடல் செய்வதும், அரசு வைத்திருக்கும் இரகசியங்களையும் அதன் விவரங்களையும் வேற்றவர்களுக்குக் கொடுப்பது போன்ற குற்றங்களுக்குப் பெயர்தான் அலுவலக இரகசியச் சட்டம் Official Secrets Act. இந்தச் சட்டம் என்ன வரையறுத்துக் கூறுகிறது என்று பார்ப்போம்.

மேற்கண்ட இரண்டு குற்றங்கள் அல்லாமல், மூன்றாம் குற்றப் பிரிவு ஒன்றும் உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு இடையூறாக, எவரும் போகக்கூடாது என்று தடை செய்யப்பட்ட இடத்திற்குள்ளும் யாரும் நுழையக் கூடாது.

மீறி நுழைந்து அங்குள்ள இரகசியங்களை அறிந்து மற்றவர்களுக்குக் கொடுப்பது எதிரிகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இரகசியங்களை வரைபடம் மூலம் வரைவது அல்லது அதற்கான திட்டம் வகுப்பது, அல்லது இரகசிய நகல்களை உருவாக்கிக் கொடுப்பது, நமது எதிரிகளுக்குப் பயன்படும் வகையில், புள்ளி விவரங்களைத் திரட்டிக் கொடுப்பது அல்லது ஒலி நாடாக்களில் பதிவு