பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

பத்திரிகை நடத்துவது எப்படி?


சந்தா எண் இது என்று எண்ணையும் குறித்து, உடனே அனுப்பிய அஞ்சலகத்தாருக்கே அட்டையைப் பூர்த்தி செய்து அனுப்பிவிட வேண்டும்.

அவ்வாறு அனுப்பப்பட்ட பத்து அஞ்சலட்டைகளில் குறைந்தது ஆறு அட்டைகளாவது ‘ஆம்’ என்ற பதிலோடு அவர்களுக்கு வந்துவிட்டால், அஞ்சலகம் அந்தப் பத்திரிகைக்குரிய அஞ்சல் சலுகை அனுமதியை வழங்கிவிடும். இதுதான் பத்திரிகையைக் குறைந்த தபால் செலவில் அனுப்பி வைக்கும் அரசு அஞ்சல் சலுகை வசதி.

அஞ்சலகத்தார் பத்திரிகையாளருக்கு அனுப்பிய சந்தாதாரர் சலுகை உத்தரவு நகலை, சம்பந்தப்பட்ட எல்லையிலுள்ள அஞ்சலக அதிகாரியிடம் காண்பித்தால், பத்திரிகையைச் சந்தாதாரர்களுக்கு மட்டுமல்ல, வெளியூர் விற்பனை முகவர்களுக்கும் Agents இரயில்வே நிலைய பார்சல் அதிகாரிகளுக்கும், பத்திரிகைகளை அனுப்பி வைக்கும் அஞ்சல் சலுகை நகலைப் பார்த்ததும் அனுமதித்து விடுவார்கள்.

அஞ்சலகம் குறிப்பிடும் வெளியீட்டு நாட்களில் பத்திரிகையைத் தவறாமல் அனுப்பிவிட வேண்டும். குறிப்பிட்ட அந்த நாள் தவறினால் அரசு வழங்கிய அஞ்சல் சலுகை அனுப்பமுடியாத தடைகள் உண்டாகும்.

அஞ்சலகமும், இரயில்வே பார்சல் நிலையமும், பதிவு பண்ணப்பட்ட பத்திரிகைதானா என்று பார்க்க Regd. எண் அச்சாகி இருக்கிறதா என்று பத்திரிகையின் கடைசி பக்க மேல் முனை இடத்தை அஞ்சலக அதிகாரிகள் பார்ப்பார்கள்.

எனவே, தவறாமல் இதழ்தோறும் பதிவு எண்ணும், இம்பிரிண்ட் விவரமும் அச்சடித்திருக்க வேண்டும். இல்லையானால், பத்திரிகை விற்பனைக்குப் போகாத சூழ்நிலைக்கு உருவாகிவிடும் என்ற பயம் பத்திரிகை நடத்தும் அலுவலகத்திற்கு இருந்தாக வேண்டும். இந்த விவரம்தான் பத்திரிகை நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளாகும்.